ரஜினியின் கூலி.. இருட்டு அறையில் முரட்டு குத்து..1000 கோடிக்கு நோ சான்ஸ்.. விடாமல் தாக்கும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி சுமாரான ரெஸ்பான்ஸைதான் பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக படம் சேதாரத்தை சந்தித்தாலும் வசூலில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. நான்கு நாட்களில் படமானது 400 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தாலும்; முன்பே கணிக்கப்பட்டிருந்த ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாத்தியமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கார்த்தி, விஜய், கமல் ஆகியோரை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் கூலி படத்தில் இணைந்தார். மூன்று நடிகர்களின் மார்க்கெட்டையும் தனது இயக்கத்தால் லோகி எப்படி மேற்கொண்டு உயர்த்தினாரோ அதேபோல்தான் ரஜினிக்கும் செய்வார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். படமானது கடந்த 14ஆம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் மொத்தம் 5,000 ஸ்க்ரீன்களில் படம் வெளியானதாக சொல்லப்படுகிறது.
மோசமான விமர்சனம்: முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக கொண்டாட்டத்தோடு திரையரங்குக்குள் சென்ற ரசிகர்களுக்கு பெரிய இடியை இறக்கியிருந்தார் இயக்குநர். ரஜினிகாந்த்தின் ரசிகர்களுக்கு படம் அருமையாக இருந்ததுதான். ஆனால் பொதுவான ரசிகர்களுக்கு படம் சுத்தமாக கனெக்ட் ஆகவில்லை. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள், தட்டையான திரைக்கதை என லோகேஷ் சொதப்பலின் உச்சமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.

பறக்கும் மீம்ஸ்: விமர்சனம் செய்தது மட்டுமின்றி லோகேஷ் கனகராஜை கலாய்த்து மீம்ஸ்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முன்னர் அவர் இயக்கியிருந்த லியோ படத்துக்கும் இதே நிலைமைதான் உருவானது. லியோ, கூலி என அடுத்தடுத்து அடி வாங்கியிருப்பதால் அவரது மார்க்கெட் இனியும் நம்பர் 1 இடத்தில் இருக்குமா என்ற சந்தேகம் திரைத்துறையினரிடம் எழுந்துவிட்டது என்பதுதான் உண்மை. அதேசமயம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்பது அவரின் ரசிகர்களுடைய நம்பிக்கை.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: கூலி படத்தை கடுமையாக விமர்சனம் செய்திருந்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "நெகடிவ் விமர்சனங்களை காலிசெய்து வசூல் சாதனை படைத்த கூலி. தலீவர் ஃபேன்ஸ் அலப்பறை. அன்பே சிவம் வசூலில் தோல்வி அடைந்தது. ஆனால் அதை மொக்கைப்படம் என்று சொன்னவர்கள் மிகக்குறைவு. ரஜினி, ரேவதி நடித்த கை கொடுக்கும் கை படம் தேசிய விருதை வென்றது. ஆனால் வசூலில் தோல்வி. கடைசி விவசாயி படம் வெளியான முதல்நாளே படுதோல்வி. ஆனால் அதை பாராட்டியவர்கள் அதிகம்.
இருட்டு அறையில் முரட்டு குத்து: திரிஷா இல்லன்னா நயன்தாரா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து போன்றவை வசூலில் பெரிய வெற்றி. ஆனால் அவை கடுமையாக விமர்சிக்கப்பட்டன. ஆகவே.. விமர்சனங்களையும், வசூலையும் ஒப்பிட்டு உளறுவதில் அர்த்தமில்லை. இது விருதுகளை வென்ற படங்களுக்கும் பொருந்தும். லோகேஷ் கனகராஜ், அமீர்கான், ஆயிரம் கோடி என ஹைப்பை ஏற்றியதுதான் கூலி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மற்றபடி.. படம் பார்த்த பலரும் தியேட்டர் எனும் இருட்டு அறையில் வாங்கிய முரட்டு குத்துதான் இந்த கூலி.
டிசைன் டிசைனாக வடை: கங்குவா 2,000 கோடி அடிக்கும் எனக்கூவி பல்ப் வாங்கினார் அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராசா ஆனால் கலாநிதி மாறனோ, லோகேஷ் கனகராஜோ.. கூலி 1,000 கோடி அடிக்குமென கூறவே இல்லை. கூலி ரிலீஸ்க்கு பல மாதங்கள் முன்பிருந்தே ஆயிரம் கோடி கன்ஃபர்மா அடிக்கும் என ஒவ்வொரு நாளும் ரஜினி ரசிகர்கள் மற்றும் அனுதாபிகள்தான் டிசைன் டிசைனாக வடை சுட்டுக்கொண்டு இருந்தார்கள். எவ்வளவு முக்கினாலும் 1,000 கோடி சாத்தியமில்லை என்பதே உண்மை" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











