விமர்சகர்களை விமர்சித்த மெய்யழகன் இயக்குநர் பிரேம்குமார்.. பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: ஒளிப்பதிவாளராக தனது திரை பயணத்தை ஆரம்பித்த பிரேம்குமார் 96 திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோரை வைத்து மெய்யழகன் திரைப்படத்தை இயக்கினார். அந்தப் படமும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் விமர்சகர்கள் குறித்து பிரேம் பேசிய கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பசங்க உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோரை வைத்து முதன்முதலாக 96 படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக கார்த்தி, அரவிந்த் சாமி உள்ளிட்டோரை வைத்து மெய்யழகன் படத்தையும் இயக்கினார். கடந்த வருடம் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரேமின் கருத்து: அடுத்ததாக 96 படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குகிறார். மேலும் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்குவதாகவும் இருந்தது. ஆனால் அது ட்ராப்பாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் ஃபகத் பாசிலை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்நிலையில் பிரேம் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 'மெய்யழகன் படத்தை நான் மலையாளத்தில் எடுத்திருந்தால் அதனை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியிருப்பார்கள். தமிழில் எடுத்தது தவறு என்று பலர் சொல்கிறார்கள். இருப்பினும் ஓடிடியில் பாராட்டு கிடைத்தது. பைரசியைவிடவும் பெரிய பிரச்னையாக விமர்சகர்களை பார்க்கிறேன். அவர்களுக்கு மன ரீதியாக பிரச்னை இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு: அவரது இந்தக் கருத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் ஆர்வா என்ற ரசிகரின் கருத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். அந்தப் பதிவில், "மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் - எழுத்தாளர் ஜி.நாகராஜன்:

Blue Sattai Maran Replies to Meyyazahgan and 96 Director Premkumar

சம்பளத்தை விட்டுக்கொடுத்த சேது: '96' படம் வெளியாகறதுக்கு முதல் நாள் நைட்டு, அவ்வளவு பெரிய பஞ்சாயத்துல அதன் தயாரிப்பாளர் சிக்கி இருந்தாரு.. இந்தப்படத்தை ரிலீஸே பண்ண முடியாது அப்படிங்கற கொடுமையான கஷ்டத்துல இருந்தாரு.. அன்னைக்கு நைட் நடந்த பஞ்சாயத்துல விஜய் சேதுபதி, அவருடைய சம்பளத்துலருந்து மிகப்பெரிய தொகையை விட்டுக் கொடுத்தாரு.

திண்டாட வைத்தார்கள்: "இந்தப்படம் எல்லாம் தேறவே தேறாது" அப்படின்னு டிஸ்ட்ரிபியூட்டர் சைடுல இருந்தும் சொல்லப்பட்டது. மறுநாள் விடியுது.. படத்தை தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க... மக்கள்கிட்ட இந்த படம் பத்தின பெரிய எதிர்பார்ப்போ, ஆர்வமோ இல்லாம லேசான கூட்டத்தோடுதான் படம் ஆரம்பிக்குது..ஃபர்ஸ்ட் ஷோ முடிஞ்ச உடனே மக்களை விட ரிவியூவர்ஸ் எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி கொண்டாடி தீர்த்தாங்க.. இப்படி ஒரு படம் தமிழ்ல அபூர்வம், குறிஞ்சிப்பூ அப்படி இப்படின்னு எழுதி திண்டாட வெச்சாங்க...

பாசிட்டிவ்தான்: அந்த ரிவ்யூ'க்கு அப்புறம் மக்கள் கூட்டம் கூட்டமா தியேட்டருக்கு போக ஆரம்பிச்சாங்க.. அந்த ரெண்டு நாள்ல படம் மிகப்பெரிய கலெக்ஷனை பெற ஆரம்பிச்சது.. இன்னொரு பக்கம் ராட்சசனும் பயங்கரமா ஓட ஆரம்பிச்சது.. மக்கள் ரெண்டு படத்துக்கும் மிகப் பிரமாதமான வரவேற்பைக் கொடுத்தாங்க.. ரிவ்யூவர்ஸும் சூப்பரான ரிவியூஸை ரெண்டு படத்துக்கும் கொடுத்திருந்தாங்க

இன்னமும் இருக்கு: ஒரு நெகட்டிவ் ரிவ்யூகூட இந்த இரண்டு படங்களுக்குமே வரல அப்படிங்கறது குறிப்பிடத்தக்கது. அவ்ளோ நெருக்கடியில இருந்த தயாரிப்பாளர், படத்தோட வெற்றில பெரிய ஆசுவாசம் அடைஞ்சாரு.. படம் மிகப்பெரிய ஹிட்.. ராம்சரண், சேரன், சமந்தா'ன்னு அன்னைக்கு டாப்ல இருந்த அத்தனை தமிழ், & தெலுங்கு ஆக்டர்களும் படத்தைப்பத்தி வலிய வந்து பேசினாங்க.. இது அத்தனையும் இன்னைக்கும் யூ-ட்யூப்ல இருக்கு...

கடவுள் போல் பார்த்தார்: இந்த ஹிட்டுக்கு அடுத்த நாளோ, அதுக்கு அடுத்த நாளோ பிரேம் பத்திரிகையாளர்களை சந்திச்சாரு.. வரிசையா நிறைய பேட்டிகள் கொடுத்தாரு... இந்த படத்தை விமர்சகர்கள்தான் 'ஆஹா ஓஹோன்னு எழுதி எல்லா மக்கள்கிட்டயும் கொண்டு போய் சேர்த்தாங்க. ரிவியூவர்ஸ் இல்லனா இப்படி ஒரு வெற்றி சாத்தியமே இல்லைன்னு சொன்னாரு... ரிவியூவர்ஸ் எல்லாரையும் கடவுள் போல பார்க்கிறேன் அப்படின்னு கூட சொன்னாரு...

நாகராஜன் சொன்னது: அன்னைக்கு இதே ரிவ்யூவர்ஸ்தான் அவ்வளவு நல்லவங்க, தெய்வம், நல்ல படத்தை கை விட மாட்டாங்க" அப்படின்னு பேசின அதே பிரேம்குமார்தான், இன்னைக்கு ரிவ்யூவர்ஸை மனநலம் பாதிச்சவங்கன்னு சொல்லியிருக்காரு... ஜி. நாகராஜன் மனிதர்களைப்பத்தி ஒரு மிகப்பிரபலமான ஒரு quote சொல்லியிருப்பாரு... அதுதான் நியாபகத்துக்கு வருது.. உங்களுக்கும் அந்த Quote தெரிஞ்சா கமெண்ட்'ல சொல்லிட்டு போங்க" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X