twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிங்கப்பூரில் திடீரென தடைசெய்யப்பட்ட ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன்.. என்ன காரணம் தெரியுமா?

    |

    சென்னை: ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆன்டி இண்டியன் திரைப்படம் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டுள்ளது.

    Recommended Video

    Anti Indian Movie Review | Yessa ? Bussa ? | Blue sattai Maaran | Filmibeat Tamil

    டிசம்பர் 10ம் தேதியான இன்று ஆன்டி இண்டியன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

    தணிக்கை குழு தடையை எதிர்த்து சட்டப் போராட்டத்தால் வென்ற ஆன்டி இண்டியன் படக்குழுவினர் சிங்கப்பூரிலும் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    12 வயது சிறுவனின் இதய நோய் தீர உதவுங்கள் ப்ளீஸ்

    வெளியானது ஆன்டி இண்டியன்

    வெளியானது ஆன்டி இண்டியன்

    தணிக்கை குழு படத்தை பார்த்து விட்டு 'கட்' கொடுக்க கூட முடியாது. இந்த படம் தடை செய்யப்படுவதாக அறிவித்து இருந்த நிலையில், தயாரிப்பாளர் ஆதம் பாவா மற்றும் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் சட்ட ரீதியாக நடத்திய போராட்டம் வெற்றி பெற்ற நிலையில், இன்று திரையரங்குகளில் ஆன்டி இண்டியன் திரைப்படம் வெளியாகி உள்ளது.

    அதிகரித்த தியேட்டர்கள்

    அதிகரித்த தியேட்டர்கள்

    ஆன்டி இண்டியன் திரைப்படத்தை குறைந்த பட்சம் 150 முதல் அதிகபட்சமாக 175 திரையரங்குகளில் வெளியிடவே படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பு காரணமாக தமிழ்நாட்டில் 228 தியேட்டர்கள் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கர்நாடகாவில் 20 திரையரங்குகளில் படம் வெளியாகி உள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் அறிவித்துள்ளார்.

    பிரபலங்கள் பாராட்டு

    பிரபலங்கள் பாராட்டு

    ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இண்டியன் திரைப்படத்தை பார்த்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, சீமான், பாக்கியராஜ், சேரன் மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்ட பல இயக்குநர்கள் படம் நல்லா இருக்கு என பாராட்டி உள்ளனர்.

    சிங்கப்பூரில் தடை

    சிங்கப்பூரில் தடை

    அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படத்தை ரிலீஸ் செய்ய ஆன்டி இண்டியன் படக்குழு முயற்சி செய்தது. அமெரிக்காவில் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரில் படம் ரிலீஸ் ஆகவில்லை. ஆன்டி இண்டியன் படத்தை சிங்கப்பூரில் தடை செய்துள்ளனர்.

    சர்ச்சைக்குரிய காட்சி

    சர்ச்சைக்குரிய காட்சி

    ஆன்டி இண்டியன் திரைப்படத்தில் சாதி மற்றும் மதத்தை வைத்து நடத்தும் அரசியலை பகிரங்கமாக எடுத்து கூறியுள்ளதால் தான் தணிக்கை குழுவே அந்த படத்தை முதலில் தடை செய்தது. இந்நிலையில், மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் சிங்கப்பூரில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அந்த படத்தை அங்கே ரிலீஸ் செய்ய அனுமதிக்கவில்லை.

    மறு தணிக்கை

    மறு தணிக்கை

    சிங்கப்பூரில் படம் வெளியாகாதா காரணத்தினால் ஆன்டி இண்டியன் படக்குழு அங்கேயும் மறு தணிக்கைக்காக மேல் முறையீடு செய்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் சிங்கப்பூரிலும் படம் வெளியாகும் என ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார்.

    English summary
    Singapore Examine Committee banned Blue Sattai Maran’s directorial debut movie Anti Indian. Blue Sattai Maran’s team applied for the re examine for Singapore release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X