தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆக தகுதி இருக்கான்னு வருத்தப்பட்ட ஹரிஷ் கல்யாணுக்கு அட்வைஸ் செய்த பிரபலம்..

சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி நடிப்பில் வெளியாகியுள்ள படம் டீசல். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். படம் கடந்த் 17ஆம் தேதி வெளியானாலும், படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் டீசல் படம் பார்க்க சென்னை, வடபழனியில் உள்ள கமலா தியேட்டருக்கு வந்த ஹரிஷ் கல்யாணை சூழ்ந்து கொண்ட கூல் சுரேஷ் பேசிய பேச்சை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து, ஹரிஷ் கல்யாணுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

ஏற்கனவே கூறியது போல அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவான படமான டீசல் படம் குறைந்த அளவிலான காட்சிகளே தமிழ்நாட்டில் கிடைத்தது. ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை தொடர்ந்து பாராட்டி வருவதால் படத்தின் காட்சிகள் வரும் காலங்களில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும்போது படம் முதல் இரண்டு நாட்களில், சுமார் 50 லட்சங்கள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. படம் மேலும் வசூல் அதிகரிக்கும் என்பதால் படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

Blue Sattai Maran Slams Harish Kalyan Diesel Movie Promotion With Cool Suresh

டீசல்: இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களில் பாக்ஸ் ஆபீஸில் முதல் இரண்டு நாட்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்றால் அது, டியூட், அதற்கு அடுத்த இடத்தில் பைசன் படமும் மூன்றாவது இடத்தில் டீசல் படமும் உள்ளது. படத்தின் புரோமோசனின் போது, திரைத்துறையில் உள்ள பிரபலம் ஒருவர், தனது படமான டீசல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக என்ன தகுதி உள்ளது என்று தயாரிப்பாளரிடம் கேட்டதாக கூறி வருத்தப்பட்டார். மேலும் நல்ல கதையும் அதை புரோமோட் செய்ய நல்ல டீமும் இருந்தால், யார் படம் வேண்டுமானாலும் தீபாவளிக்கு வரலாம் என்று பேசி இருந்தார்.

ப்ளூ சட்டை மாறன்இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. படம் வெளியாகி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிறது. இந்நிலையில் ரசிகர்களுடன் படம் பார்க்க, சென்னை, வடபழனியில் உள்ள கமலா தியேட்டருக்கு வந்த ஹரிஷ் கல்யாணை சூழ்ந்து கொண்ட கூல் சுரேஷ் பேசிய பேச்சை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து, ஹரிஷ் கல்யாணுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

Blue Sattai Maran Slams Harish Kalyan Diesel Movie Promotion With Cool Suresh

கூல் சுரேஷ்: அதாவது கூல் சுரேஷ் பேசும்போது, பிக்பாஸில் பலூன் அக்காவைப் பார்க்காமல் டீசல் படத்திற்கு வந்து அதுல்யா ரவியை பாருங்கள், வாட்டர்மெலன் திவாகரைப் பார்க்காமல் எனது தம்பி, ஹரிஷ் கல்யாணைப் பாருங்கள். நான் பிக்பாஸில் கலந்து கொண்டபோது ஹரீஷ் கல்யாண் எனக்கு ரூபாய் 2500 மதிப்புள்ள டீசர்ட் ஒன்றைக் கொடுத்தார். அன்பான மனிதர் ஹரீஷ் கல்யாண், இயக்குநர் சண்முகம் இதுபோன்ற சமூக அக்கறை கொண்ட படத்தை தொடர்ந்து எடுக்க வேண்டும் என்று பேசினார். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், " இதையெல்லாம் ஒரு ப்ரமோஷன் என ஹரீஷ் கல்யாண் நினைத்தால்.‌‌. வளர்ந்து வரும் நேரத்தில்.. தன்னைத்தானே பின்னோக்கி நகர்த்துகிறார் என்று அர்த்தம்" என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X