Rajini X Vijay: இன்னைக்கு மட்டும் ரஜினிக்கு கண்ணு வேர்க்குதா? பிரபலம் சூப்பர் ஸ்டாரை விட மாட்டார் போலயே?
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கி உள்ளது. பலரும் பல கோணத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக திரையுலகில் பலரும் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்துக்கள், பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்து மட்டும் ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அதாவது இந்த துயரச் சம்பவம் குறித்த தகவல்களும் அதனால் ஏற்றப்ப உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்பது 10இல் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 40 ஐத் தொட்டுள்ளது. இப்படி இருக்கும்போது நேற்று இரவே, 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் திரைப் பிரபலங்கள் பலரும் இந்த துயரச் சம்பவம் தொடர்பாக தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், " கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்பு செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று தெரிவித்திருந்தார்.

இவரது இந்த கருத்து தொடர்பாக மறைமுகமாக அட்டாக் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன் என்று பேச்சுகள் எழுந்து வந்தது. அதாவது முதலில், நேற்று இரவே, " கரூர் துயர நிகழ்வு குறித்து விரைவான விசாரணை நடத்தி.. சரியான தீர்ப்பு வருமென நம்புவோம். எப்படி நடந்தது? யாரெல்லாம் காரணம் என்பது வெளிச்சத்திற்கு வரும் முன்பாகவே. சில பிணந்தின்னி 'கழுகுகள்' கேடுகெட்ட, ஒருதலைபட்சமான கருத்துக்களை தெரிவித்தால்.. அவற்றை செருப்பால் அடித்து துரத்த வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இப்படி இருக்கும்போது, இதையடுத்து அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவும் ரஜினியை மறைமுகமாக அட்டாக் செய்வது போலத்தான் உள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது. அதாவது, " மிகவும் வேதனையாக இருக்கிறது - கழுகு ஆதங்கம். கும்பமேளா, கள்ளக்குறிச்சி, விமான சாகச நிகழ்ச்சி, ஆணவப் படுகொலை... இதுக்கெல்லாம் வாய் தெறக்கல. இது சம்மந்தமா நிருபர்கள் எந்த கேள்வி கேட்டாலும் 'நோ கமெண்ட்ஸ்' என சொல்வதும், 'அரசியல் பேச மாட்டேன்னு எத்தனை தடவை சொல்றது?'என கோவமாக பதில் தருவது தான் வாடிக்கை. ஆனா.. இன்னைக்கு மட்டும் கழுகுக்கு திடீர்னு கண்ணு வேர்க்குது" என்று பதிவிட்டுள்ளார். இவர் இந்த இரண்டு பதிவுகளிலும் ரஜினியை விமர்சித்து தான் அவர் பதிவிட்டுள்ளார் என்று இணையத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











