Don't Miss!
- News
எடப்பாடி கேட்ட "இரண்டுமே" கிடைக்கல.. ஓபிஎஸ் ஜீரோ இல்லை.. புட்டு புட்டு வைத்த புள்ளி.. என்னாச்சு?
- Finance
PF கணக்கு வைத்துள்ளீர்களா..? பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்பு.. வரி சலுகை..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பஜன்லால் சேட்டுன்னு முதல்ல சொன்னதே விஜய் தான்.. ப்ளூ சட்டை மாறன் ஷேர் பண்ண வீடியோ.. எதுக்கு?
சென்னை: இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் பஜன்லால் சேட்டுன்னு முதல்ல சொன்னதே விஜய் தான் என ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
வார வாரம் புதிய படங்கள் வெளியானாலோ அல்லது அந்த வாரம் ஏதாவது டிரெண்டிங் ஆனால், அதை ட்ரோல் செய்து சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி விடுகிறார் ப்ளூ சட்டை மாறன்.
இந்நிலையில், தற்போது லொள்ளு சபா மனோகர் பேசிய ஒரு வீடியோவை ஷேர் செய்து பஜான் லால் சேட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
வாரிசு
பேனருடன்
சபரிமலையில்
தரிசனம்
செய்த
விஜய்
ரசிகர்கள்..
ப்ளூ
சட்டை
மாறன்
பகிர்ந்த
புகைப்படம்!

பஜன்லால் சேட்டு விமர்சனம்
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வலிமை படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் நடிகர் அஜித்தின் தோற்றத்தை வைத்து பஜன்லால் சேட் என கடுமையாக விமர்சித்தது அஜித் ரசிகர்களை கொந்தளிக்க செய்தது. ப்ளூ சட்டை மாறனின் விமர்சன வீடியோவுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.

டிரெண்டிங்கில் துணிவு
இந்த வாரம் துணிவு படத்தின் புதிய போஸ்டர்களும், நடிகர் அஜித் துணிவு படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என இயக்குநர் ஹெச். வினோத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டிகளும் டிரெண்டாகி வரும் நிலையில், மீண்டும் அந்த பஜன் லால் சேட் பஞ்சாயத்தை ஆரம்பித்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

விஜய் தான் சொன்னார்
சமீபத்தில்
நடைபெற்ற
சினிமா
விழாவில்
பேசிய
நடிகர்
லொள்ளு
சபா
மனோகர்
வேலாயுதம்
படத்தில்
என்னுடைய
கேரக்டர்
பெயர்
தான்
பஜன்லால்
சேட்டு.
நடிகர்
விஜய்
அடிக்கடி
என்னை
பார்க்கும்
போதெல்லாம்,
நீங்க
எங்க
ஊரு
பஜன்
லால்
சேட்டு
மாதிரியே
இருக்கீங்க
என
சொல்வார்
என
பேசி
உள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் கலாய்
அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் எடுத்துப் போட்டு ப்ளூ சட்டை மாறன் மீண்டும் அஜித் ரசிகர்களை சீண்டி உள்ளார். ப்ளூ சட்டை மாறனின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள் வழக்கம் போல அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். மேலும், விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே மீண்டும் ட்விட்டர் சண்டை வெடித்துள்ளது.

போட்டா போட்டி அப்டேட்
துணிவு படம் குறித்த அப்டேட்களும், வாரிசு செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த அப்டேட்களும் போட்டா போட்டி போட்டு அடுத்தடுத்து வெளியாகி விஜய், அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜய் பட அப்டேட் வரும் போது அஜித் ரசிகர்கள் நெகட்டிவ் ட்ரோல்களையும், அஜித் பட அப்டேட் வரும் போது விஜய் ரசிகர்களும் நெகட்டிவ் ட்ரோல்களையும் மீம்களையும் போட்டுத் தாக்கிக் கொள்கின்றனர்.

பொங்கலுக்கு இருக்கு
இப்பவே சோஷியல் மீடியாவில் இரு தரப்பும் இப்படி அடிச்சிக்கிறாங்களே பொங்கலுக்கு தியேட்டரில் இரண்டு படங்களும் நேரடியாக மோத உள்ள நிலையில், தியேட்டர்களின் நிலை என்ன ஆகும் என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. பட ரிலீசுக்கு முன்பாக இரு நடிகர்களும் தங்கள் ரசிகர்களை கொஞ்சமாவது கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.