Don't Miss!
- Lifestyle
உடலுறவுக்கு அடிமையாக இருந்த அரசர்கள் யார் தெரியுமா? இவர் 18,000 பெண்களுடன் உடலுறவு வைச்சவராம்...!
- News
திண்டுக்கல்: வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி.. சிக்கிய இளைஞர்.. ‛துணிவு’ படம் காரணமா?
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Automobiles
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே... துணிவு ட்ரெய்லரை பங்கமாய் கலாய்த்த ப்ளு சட்டை மாறன்...!
சென்னை: அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது.
ஹெச்
வினோத்
இயக்கத்தில்
அஜித்துடன்
மஞ்சு
வாரியர்,
சமுத்திரகனி
உள்ளிட்ட
பலர்
இந்தப்
படத்தில்
நடித்துள்ளனர்.
முழுக்க
முழுக்க
ஆக்சன்
ஜானரில்
உருவாகியுள்ள
துணிவு
ட்ரெய்லர்,
அஜித்
ரசிகர்களிடம்
மிகப்
பெரிய
வரவேற்பைப்
பெற்றுள்ளது.
இந்நிலையில், துணிவு பட ட்ரெய்லரை ப்ளு சட்டை மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக விமர்சித்து வருவது வைரலாகி உள்ளது.
துணிவு
டிரைலர்
வெளியானதும்
டிரெண்டான
நெல்சன்..
இப்போ
அண்ணா
செம
ஹாப்பியா
இருப்பாரு!

வெளியானது துணிவு ட்ரெய்லர்
அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 7 மணிக்கு யூடியூப்பில் வெளியானது. ஏற்கனவே கிடைத்த தகவல்களை உறுதி செய்யும் வகையில், வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்தே இந்தப் படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளார் அஜித். மங்காத்தா படத்தை போல நெகட்டிவான மேனரிசத்தில் அஜித் நடித்துள்ளதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில், துணிவு ட்ரெய்லர் இதுவரை 15 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

பீஸ்ட் VS துணிவு
துணிவு பட ட்ரெய்லர் ஒருபக்கம் சாதனை படைத்து வர, இன்னொரு பக்கம் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. ட்ரெய்லர் ரிலீஸான சிலமணி நேரங்களிலேயே பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், துணிவிலும் இருப்பதாக ஸ்கிரீன் ஷாட் எடுத்து விஜய் ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கினர். அதேபோல், இப்போது ஹெச் வினோத்தை பார்த்து நெல்சன் ரொம்பவே ஹேப்பியாக இருப்பார் என்றும் கமெண்ட்ஸ் செய்துவந்தனர். இதனைத் தொடர்ந்து தற்போது ப்ளு சட்டை மாறனும் துணிவு ட்ரெய்லரை கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.

வடிவேலு மீம்ஸ்
துணிவு ட்ரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ப்ளு சட்டை மாறன், பீஸ்ட் மால் செட், துணிவு பேங்க் செட் என வின்னர் படத்தின் வடிவேலுவின் போட்டோவை போட்டு கலாய்த்துள்ளார். அதாவது பீஸ்ட் படத்தில் எப்படி மால் செட்டிங் போடப்பட்டிருந்ததோ, அதேமாதிரி துணிவு படத்திலும் பேங்க் செட் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் 'எலி' படத்தில் ஹீரோவாக நடித்த வடிவேலு, அதில் ஒரு வங்கியில் கொள்ளையடிக்க சென்று அவஸ்தைப்படும் காமெடி காட்சி வரும். அதனை துணிவு பேங்க் ராபரி ஸ்நீக்பீக் என்ற கேப்ஷனுடன் ஷேர் செய்து கலாய்த்துள்ளார். மேலும், ஹெச் வினோத்தை பார்த்து நெல்சன் பரிதாபப்படுவதைப் போலும் ஒரு வடிவேலு மீம்ஸ் போட்டு ட்வீட் செய்துள்ளார்.

இன்ஸைட் மேன் ட்ரெய்லர்
அதற்கு அடுத்தபடியாக இன்னொரு ட்வீட்டில் 'எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே" என்ற கேப்ஷனுடன் ஹாலிவுட் படமான இன்ஸைட் மேன் ட்ரெய்லரை ஷேர் செய்துள்ளார். 2006ம் ஆண்டு ஹாலிவுட்டில் ரிலீஸான 'Inside Man' திரைப்படம் வங்கிக் கொள்ளையை பின்னணியாக வைத்தே உருவானது. இந்தப் படத்தின் ட்ரெய்லரும் துணிவு ட்ரெய்லரும் ஒரேமாதிரி இருப்பதாகக் கூறியுள்ளார் ப்ளு சட்டை மாறன். துணிவு ட்ரெய்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ட்ரோல் செய்யப்படுவது வைரலாகி வருகிறது. நெட்டிசன்களில் சிலர் இது மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்ஸின் தழுவலாக இருக்குமோ என்றும் கேள்வியெழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் துணிவு திரைப்படம் ரிலீஸான பின்னரே இந்த யூகங்களுக்கெல்லாம் விடைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.