இரண்டில் எந்த ட்ரெய்லர் பீதியை கிளப்புகிறது? வாரிசு, துணிவு படங்களை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் படங்கள் எல்லாம் வித்தியாசமான திரைக்கதைகளுடன் வெளியாகிறது. ஆனால், அஜித் மற்றும் விஜய் படங்களின் கதைகள் மட்டும் ஏன் அப்படியே பழைய படங்களை நினைவுப்படுத்துகிறது என வாரிசு மற்றும் துணிவு ட்ரெய்லர்களை பார்த்து ஏகப்பட்ட பொதுவான ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றன்ர்.

இந்நிலையில், இரண்டு ட்ரெய்லர்களில் எந்த ட்ரெய்லர் பீதியை கிளப்புகிறது? என ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் விஜய், அஜித் ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

எப்படி ட்ரெய்லர் வந்தாலும் ஹிட் ஆக்கிடுவார்கள் ரசிகர்கள். ஆனால், அவர்களுக்காக அஜித், விஜய் ஏன் புதுசா ட்ரை பண்ண மாட்றாங்க என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

மங்காத்தாவை மாதிரி இருந்தா போதும்

மங்காத்தாவை மாதிரி இருந்தா போதும்

10 வருஷத்துக்கு முன்னாடி வந்த மங்காத்தா மாதிரி மீண்டும் அஜித் ஒரு படம் தந்தா போதும் என்கிற அளவுக்குத்தான் ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்றும் பீஸ்ட் படத்தை அப்படியே வங்கி கொள்ளையாக மாற்றி எடுத்து வைத்துள்ளனர். மணி ஹெய்ஸ்ட், ருத்ரா என ஏகப்பட்ட ட்ரோல்கள் துணிவு ட்ரெய்லர் வந்ததுமே சோஷியல் மீடியாவில் அனல் பறந்தன.

மெகா சீரியல்

மெகா சீரியல்

துணிவு படத்தை விஜய் ரசிகர்கள் எந்தளவுக்கு கலாய்த்தார்களோ அதே அளவுக்கு வாரிசு ட்ரெய்லர் வெளியானதும் அம்மா பாசம் என உருகும் விஜய் ரசிகர்களை பார்த்து மெகா சீரியல் என அஜித் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். தெலுங்கு சினிமா ரசிகர்கள் அலா வைகுந்தபுரமுலோ, அட்டாரண்டிகி தாரேதி, மகரிஷி என தெலுங்கில் வெளியான பல படங்களின் பெயர்களை சொல்லி கலாய்த்து வருகின்றனர்.

இரண்டில் பீதியை கிளப்புவது எது

இரண்டில் பீதியை கிளப்புவது எது

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு படங்களின் ட்ரெய்லர்களை பார்த்தால் புதிய படமாக இருக்காது என கலாய்க்கும் விதமாக இரண்டில் எந்த ட்ரெய்லர் பீதியை கிளப்புகிறது என கேள்வி எழுப்பி கலாய்த்துள்ளார். விஜய், அஜித் ரசிகர்கள் வழக்கம் போல அவரை கமெண்ட் பக்கத்தில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வந்தா ராஜாவாதான் வருவேன் 2

வந்தா ராஜாவாதான் வருவேன் 2

பவன் கல்யாண் நடிப்பில் வெளியான அந்தாரண்டிகி தாரேதி படத்தின் ரீமேக்கான வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் 2ம் பாகமா இது என்றும் வாரிசு படத்தை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார்.

நான் கூட புதுசுன்னு நினைச்சிட்டேன்

நான் கூட புதுசுன்னு நினைச்சிட்டேன்

துணிவு ட்ரெய்லரை பார்த்தும் அதன் ட்ரோல்களை பார்த்தும் துவண்டு கிடந்த அஜித் ரசிகர்கள் இப்போதான் ஹாப்பி ஆகி உள்ளனர் என்றும் 'அப்பாடா.. நான்கூட புதுசுன்னு நெனச்சி பயந்துட்டங்க' என அஜித் ரசிகர்கள் சந்தோஷப்பட்டு வருவதாகவும் மீம் போட்டு கலாய்த்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X