போட்றா 30 டிக்கட்டை.. இது எங்க கெளரவ பிரச்னை.. படையாண்ட மாவீர பட வைப்ஸ்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்!

சென்னை: இயக்குநர் கெளதமன் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளியான படையாண்ட மாவீரா படத்துக்கு ஆட்கள் வராத நிலையில், ஷோக்கள் கேன்சல் செய்யப்பட்டதால் கடுப்பான சிலர் ஒட்டுமொத்தமாக 30 டிக்கெட்டுகளை வாங்கி இலவசமாக தியேட்டருக்கு வந்தவர்களை பார்க்கச் சொல்லும் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ளார்.

காடுவெட்டி குருவின் கதையாக உருவாகி உள்ள படையாண்ட மாவீரா படம் சாதியப் படம் இல்லை என்றும் எந்த சாதியினரையும் இழிவாக காட்டவில்லை என பத்திரிகையாளர் சந்திப்பின் போது கெளதமன் பேசியிருந்தார்.

Blue Sattai Maran trolls Padaiyaanda Maaveera free tickets issue video

ஆனால், கடந்த வாரம் வெளியான படங்களில் சக்தித் திருமகன் மற்றும் கவினின் கிஸ் படத்தை தவிர்த்து தண்டகாரண்யம் உள்ளிட்ட எந்தவொரு படமும் பெரிதாக மக்களை கவரவில்லை.

பாக்ஸ் ஆபீஸில் படு தோல்வி: கெளதமன் இயக்கி நடித்த படையாண்ட மாவீரா படம் கடந்த வாரம் சக்தித் திருமகன், கிஸ், தண்டகாரண்யம் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியானது. முதல் நாளில் வெறும் 2 லட்சம் மட்டுமே ஒட்டுமொத்த வசூலாக வந்ததாக சாக்னிக் வெப்சைட் தகவல் வெளியிட்டு இருந்தது. பல ஏரியாக்களில் இந்த படத்தை தியேட்டர்கள் வாங்கவில்லை என்றும் வாங்கிய தியேட்டர்களும் ஒரே ஒரு ஷோவை மட்டுமே ஓட்டியதாகவும் அதற்கும் ஆட்கள் வரவில்லை என்றும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

போட்றா 30 டிக்கெட்டை: இந்நிலையில், எங்க சமூகத்து ஆள் ஒருவன் எங்க சமூகத்துக்காக எடுத்த படத்தை பார்க்க ஷோ இல்லையா என ஒரு தியேட்டரில் கத்தி கூச்சலிட்ட நபர் ஒருவர் போட்றா 30 டிக்கெட்டை என்று சொல்லி ஒட்டுமொத்தமாக ஒரு ஷோ ஓட்டும் அளவுக்கு டிக்கெட்டுகளை வாங்கி இலவசமாக தியேட்டருக்கு அங்கிருந்தவர்களை பார்க்க அனுப்பும் வீடியோ ஒன்றை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

கெளரவ பிரச்னை: படையாண்ட மாவீரா‌ Vibes:

'என் சமுதாயத்தை சேர்ந்தவர் எடுத்த படத்துக்கு.. தியேட்டர்ல ஷோ இல்லையா? இது எங்க கௌரவ பிரச்னை‌, மானப்பிரச்னை.

போட்றா 30 டிக்கட்டை' என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு ட்ரோல் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X