விஜய்யை அவர் சும்மா விடமாட்டாரு.. சீமானை கோர்த்துவிடும் ப்ளூ சட்டை மாறன்.. வேற ட்ராக்ல மாத்துறாரே
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களம் காணவிருக்கிறது. திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டியே என்று விடாமல் கூறிவருகிறார் விஜய். நாகப்பட்டினத்தில்கூட நேற்று பேசும்போது இதையேத்தான் கூறியிருந்தார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நீண்ட வருடங்களாகவே வைத்துவந்த கோரிக்கையை நிறைவேற்றி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடந்தபோதே கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று முழங்கினார். அதனையடுத்து தான் ஏறிய மேடைகளில் எல்லாமே திமுகவை காத்திரமாகவே அட்டாக் செய்துவருகிறார் விஜய்.'
ஜன நாயகன் விஜய்: இதற்கிடையே அரசியலில் முழுக்க முழுக்க களமிறங்கியிருப்பதால் சினிமாவிலிருந்தும் ஒதுங்க முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் அவர். அந்தப் படமானது அடுத்த வருடம் பொங்கலையொட்டி ரிலீஸாகவிருக்கிறது. கடைசி படம் என்று கருதப்படுவதால் இப்படத்தின் மீது அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையையும், ஆர்வத்தையும் வைத்திருக்கிறார்கள்.

உங்கள் விஜய் நா வரேன்: சூழல் இப்படி இருக்க விஜய் தனது பனையூர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தே அரசியல் செய்யவில்லை; மக்களை சந்திக்கவில்லை என திமுகவினர் விமர்சித்தனர். அதற்கு பதிலடி தரும் விதமாக உங்கள் விஜய் நா வரேன் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார். இந்தப் பயணத்தை திருச்சியிலிருந்து ஆரம்பித்திருக்கும் அவர்; வாரா வாரம் சனிக்கிழமை மட்டும் தொண்டர்களை சந்திக்கிறார்.
திமுக vs தவெக: நேற்றுகூட நாகையில் தனது தொண்டர்களை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பகிரங்கமாக சவால் விட்டார். மேலும் தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேதான் போட்டியே என்றும் கூறினார். நேற்றைய சந்திப்பின்போது அவருக்கு அவரது தொண்டர்கள் வேல் ஒன்றை பரிசாக கொடுத்தார்கள். அந்த வேலை கைகளில் பிடித்தபடி பேருந்தில் மாஸாக போஸ் கொடுத்தார். அந்தப் புகைப்படமும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில், "சீமான் அண்ணனின் முப்பாட்டன் முருகனின் வேல். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவுக்குரல். அண்ணன் சாதாரணமாவே விஜய்க்கு எதிரா சலங்கை கட்டி ஆடுவாரு. இப்ப அவரோட ஆயுதங்களை விஜய் கைல எடுத்தா விடுவாரா?.அனல் கக்க ப்ரெஸ்மீட் தரப்போறாரு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications