Don't Miss!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- News
86 நிமிட பட்ஜெட் உரை.. தொடர்ந்து மேஜையை தட்டி வரவேற்ற பிரதமர் மோடி.. எத்தனை முறை தெரியுமா? ஆஹா!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Lifestyle
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளுக்கு முதலில் 'குட்-பை' சொல்லுங்க...
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர்ஸ்டார் விஜய்.. இந்தியாவிலேயே சிறந்த டான்சர்.. சீமான் பேச்சு.. ப்ளூசட்டை மாறன் ட்ரோல்!
சென்னை: நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் விஜய் என சரத்குமார் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் மீண்டும் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் விஜய் என பேசியது பரபரப்பை கிளப்பி உள்ளது.
வாரிசு மற்றும் துணிவு ட்ரெய்லர்கள் வெளியானதில் இருந்தே விமர்சகர் ப்ளூ சட்டை மாறனின் ட்விட்டர் பக்கம் செம ஆக்டிவாக மாறி உள்ளது.
எந்த ட்ரோல் கிடைத்தாலும் சும்மா வச்சு செய்து வரும் அவர், சீமான் பேசியதையும் ட்ரோல் செய்து ட்வீட்டாக போட்டுள்ளது விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.
தனுஷ் ஸ்கெட்ச்சில் சிக்கிய எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால்... எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?

சரத்குமார் பல்டி
நடிகர் விஜய்யை வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர்ஸ்டார் என பேசியது தொடர்பாக எழுந்த சர்ச்சை காரணமாக சரத்குமாரிடம் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று எடுத்த பேட்டியில், அத்தனை பெரிய கூட்டத்தை கூட்டும் அனைவருமே சூப்பர் ஸ்டார் தான் என அந்தர் பல்டி அடித்து விட்டார். விஜய் மட்டும் இல்லைங்க நம்ம அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான் என பேசி உள்ளார்.

சூப்பர் ஸ்டார் விஜய்
இந்நிலையில், சமீபத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ் சினிமா இயக்குநருமான சீமான் நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றும் பாராட்டி பேசியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தம்பி விஜய் தனது உழைப்பால் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் என பாராட்டி பேசி உள்ளார் சீமான்.

இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர்
நானும் எங்கப்பாவும் விஜய் வீட்டை கடந்த படி வாக்கிங் சென்றோம். அப்போது என் அப்பா சொன்னார். இந்த பையன் என்னம்மா டான்ஸ் ஆடுறான்ப்பா.. என்றார். இந்தியாவிலேயே விஜய் போல எந்த நடிகரும் நடனமாடுவதில்லை. அந்த அளவுக்கு முகபாவணைகள் அனைவரும் ரசிக்கும் படி கொடுத்து நடனமாடி வருகிறார் என பாராட்டினார்.

அப்போ பிரபு தேவா
"விஜய் போன்று நடனமாட இந்தியாவிலேயே எந்த நடிகரும் கிடையாது - சீமான்." என ட்வீட் போட்ட ப்ளூ சட்டை மாறன் பிரபுதேவா ரியாக்ஷன் கொடுக்கும் போட்டோவை போட்டு ட்ரோல் செய்துள்ளார். தினமும் காலையில் ஆனதுமே விஜய் ரசிகர்களை வம்பிழுப்பதே இவருக்கு வேலையாக போய் விட்டது என விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல திட்டி வருகின்றனர்.

இவங்க டான்ஸ் பார்க்கலையா
பிரபுதேவா, லாரன்ஸ், ஹ்ரித்திக் ரோஷன், அல்லு அர்ஜுன் டான்ஸ் எல்லாம் பார்க்கலையா சீமான் என நெட்டிசன்கள் நடிகர் விஜய்யை இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர் என பாராட்டிய சீமானின் பேச்சுக்கு எதிராக பதில் கமெண்ட்டுகளை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.