விஜய்யும் சீமானும் அமைதியா இருந்தா கூட.. இந்த பிரபலம் சும்மா இருக்க மாட்டாரு போலயே?

சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த காலத்தில் அவருக்கு ஆதரவாக பேசிக் கொண்டு இருந்த அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன் பின்னர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களை அறிவித்ததில் சீமானுக்கு முரண்பாடு ஏற்பட, அன்று முதல் விஜய்யை தொடர்ந்து மிகவும் காட்டமாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்படி இருக்கும்போது, அதற்கு விஜய் மீது கரிசனத்தோடு பேசி இருந்தார் சீமான். ஆனால், கரூர் துயரச் சம்பவம் குறித்து விஜய் வெளியிட்டுள்ள வீடியோ, பலருக்கும் அதிர்ச்சியும் அதிருப்தியும் தான் அளித்தது. அந்த வகையில் சீமான் தனது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இது தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் சீமானின் ஆதரவு நிலை மற்றும் கடுமையான விமர்சனங்கள் இதற்கு முன்னர் எப்படி இருந்தது என்றும், வரும் காலங்களில் அவரது விமர்சனங்கள் எப்படியெல்லாம் இருக்கலாம் என்றும் விமர்சித்து, பதிவிட்டுள்ளார்.

Blue Sattai Maran X Page Post About NTK Seeman And TVK Vijay

அதாவது, " அண்ணனின் டிசைன்:

அன்று..

* விஜய் என் தம்பி. பச்சைத்தமிழன். அவனுக்காக நான் எப்பவும் துணையாக இருப்பேன்.

* நடுவுல நின்னா லாரில அடிபட்டு சாவ.

* கோவத்துல பேசுனாலும்.. என் தம்பியை திட்டுறது தப்பில்ல.

* கூமுட்டை கொள்கை‌. மோதி பாருடா.

* தவெகல இருக்கற எல்லாரும் என் தம்பி, தங்கைகள்‌.

* அணில் குஞ்சுகள் புலியோட மோதுது‌.

* கரூர்ல நடந்த சம்பவம் தம்பி மனசை பாதிச்சிருக்கும். பாவம். அதனால பாதிக்கப்பட்ட மக்களை அவர் இன்னும் சந்திக்கல. இதை குறையா சொல்ல வேணாம். தம்பி வரலன்னா? அண்ணன் நான் ஆறுதல் சொல்ல வந்துருக்கேன்.

Blue Sattai Maran X Page Post About NTK Seeman And TVK Vijay

இன்று:

* சினிமா வசனம் பேசுகிறார் விஜய்.

நாளை:

* என் தம்பி பேசுனது சரிதான்‌.

நாளை மறுநாள்:

* உனக்கு எதுக்குடா அரசியல்? கட்சியை கலச்சிட்டு போ.

அடுத்த வாரம்:

* திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டை ஆளனும்னு பட்டா போட்டு தந்துருக்கா? என் தம்பி அரசியலுக்கு வந்தா என்ன தப்பு?

* அடுத்த மாதம்:

நடிக்கிற வேலையை மட்டும் பாரு. அரசியல் ஒரு நெருப்பு ஆட்டம். அதை நான் பாத்துக்கறேன்.

ஜனவரி 2026:

* தவெக தம்பி, தங்கைகள் எல்லாம் மாற்று அரசியலை முன்னெடுப்பாங்க. ஒரு அண்ணனா நான் கூட நிப்பேன்.

மே 2026:

* பரீட்சை லீவுல மைதானத்துல விளையாட போகாம.. அரசியல் விளையாட்டு எதுக்கு? ஓரமா போங்கடா‌. வெறியாகிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் பலர் தொடங்கி, சீமானும் விஜய்யும் அமைதியாக இருந்தால் கூட இந்த ப்ளூ சட்டை மாறன் விடமாட்டார் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X