»   »  ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சி

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் அலுவலகத்தை இடித்து தள்ளிய மும்பை மாநகராட்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சொந்தமான ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவன அலுவலக கட்டிடத்தை மும்பை மாநகராட்சி இடித்து தள்ளியது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரெட் சில்லீஸ் என்னும் சினிமா பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் விஎப்எக்ஸ் அலுவலகம் மும்பை கோரேகாவ்ன் பகுதியில் உள்ளது.

BMC Demolishes Shah Rukh Khan’s illegal canteen in Red Chillies Office

4வது மாடியில் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு 316 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சாப்பிட வசதியாக அதே தளத்தில் 2 ஆயிரம் சதுர அடியில் சட்டவிரோதமாக கேன்டீன் கட்டப்பட்டது.

இந்த சட்டவிரோத கேன்டீனை மும்பை மாநகராட்சியினர் நேற்று மாலை இடித்து தள்ளினர். ஷாருக்கான் அந்த அலுவலக கட்டிட தளத்தை வாடகைக்கு எடுத்துள்ளாரே தவிர உரிமையாளர் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

முன்னதாக 2015ம் ஆண்டு ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த சரிவுபாதையை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Brihanmumbai Municipal Corporation has demolished an illegal construction of around 2000 sq ft. at Bollywood actor Shah Rukh Khan’s production house Red Chillies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil