»   »  தேறிட்டானா திருட்டுப் பயல்?

தேறிட்டானா திருட்டுப் பயல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
தேறிட்டானா திருட்டுப் பயல்?- வீடியோ

தமிழ் சினிமா தயாரிப்பு துறையில் ஏஜி எஸ் தயாரிப்பு நிறுவனம் தனித்தன்மைமிக்கது. பட்ஜெட் படத்திலிருந்து பிரம்மாண்டமான படங்கள் வரை எவ்வித கடனும் வாங்காமல் திரைப்படத் தயாரிப்பு துறையில் நீண்ட வருடங்களாக இயங்கி வரும் ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்த முதல் படம் திருட்டு பயலே.

அதன் பின் பல்வேறு வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்ட இந்நிறுவனத்தின் தயாரிப்பில் திருட்டு பயலே - 2 நவம்பர் 30 அன்று ரீலீஸ் ஆனது.

BO report of Thiruttupayale 2

முதல் பாகத்தை இயக்கிய சுசி கணேசன், பாலிவுட் போய் படுதோல்வியடைந்து மீண்டும் கோடம்பாக்கத் திரும்பி இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருந்தார். பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடித்திருந்த இத்திரைபபடம் விஞ்ஞான வளர்ச்சியில் தகவல் தொழில் நுட்பத்தை காவல்துறை பயன்படுத்தும் விதத்தையும் அதுவே தவறாக பயன்படுத்தப்படும் பொழுது தனி மனிதனுக்கும், நிர்வாகத்தில் ஏற்படும் சிரமங்களையும் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இரு முக்கிய படங்கள் திருட்டுப்பயலே - 2, அண்ணாதுரை மட்டுமே. தியேட்டர்களில் இப்படங்களுக்கு இளைஞர்கள் கூட்டம் அலைமோதும் என தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பார்த்தனர்.

அனைத்து எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கினார்கள் சினிமா ரசிகர்கள். நவம்பர் 30 அன்று வெளியான படங்களில் நேர்த்தியான திரைக்கதை என மீடியாக்கள் விமர்சன ரீதியாக திருட்டு பயலே - 2 படத்தை பாராட்டியிருந்தாலும் எந்த தியேட்டரிலும் ஒபனிங் இல்லை .

குடும்பத்துடன் பார்க்க முடியாது, ஆனாலும் கிளுகிளு சமாச்சாரத்தை எதிர்ப்பார்த்து ஒரு தரப்பினர் பார்வையாளர் நிச்சயம் வருவார்கள் என எதிர் பார்த்து தியேட்டர் உரிமையாளர்கள் காத்திருந்து ஏமாற்றத்துக்குள்ளானார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர் கூட்டம் வந்தாலும் அரங்கு நிறையவில்லை. கடந்த ஐந்து நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 2 .50கோடிக்கும் குறைவாகவே திருட்டு பயலே மொத்த வசூல் ஆனது.

10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு இந்த வசூல் போதுமானது இல்லை என்பதே விநியோக வட்டாரங்களின் கணிப்பாக உள்ளது.

English summary
Box Office collection of Thiruttu Payale 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil