»   »  அஜீத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்த பாபி சிம்ஹா

அஜீத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்த பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல 57 படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவை ஒப்பந்தம் செய்துள்ளாராம் சிவா.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அதனால் தற்போதைக்கு தல 57 என கூறுகின்றனர்.

Bobby Simha decides to fight against Ajith

அஜீத் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு வில்லனாக யாரை போடுவது என்று யோசித்தார் சிவா. விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அர்ஜுன் மற்றும் பிரசன்னா ஆகியோரிடம் வில்லனாக நடிக்க கேட்கப்பட்டும் பலனில்லையாம்.

இந்நிலையில் தான் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா அஜீத்தை எதிர்த்து நிற்க முடிவு செய்துள்ளாராம். படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் வெளியான மெட்ரோ படத்தில் கூட பாபி சிம்ஹா வில்லத்தனம் செய்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bobby Simha has decided to play baddie for Ajith in the upcoming movie Thala 57.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil