»   »  பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா?- டி சிவாவின் அதிரடிப் பேச்சு

பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா?- டி சிவாவின் அதிரடிப் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நடிகர் ஒன்றிரண்டு சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்த உடனே அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் கெட்ட வியாதி தமிழ் சினிமாக்காரர்களைத் தொற்றி ரொம்ப காலமாகிவிட்டது.

இப்போது இந்த கெட்ட வியாதிக்காரர்கள் அடுத்து தொங்கிக் கொண்டிருப்பது பாபி சிம்ஹாவை. ஐ மேடையில் அர்னால்டின் சட்டைக் காலரை இழுத்து அசிங்கப்படுத்தி டென்ஷனாக்கி அனுப்பினாரே... அதே பாபி சிம்ஹாதான்.

Bobby Simha never becomes Rajini, says T Siva

இவரைப் பார்க்கும்போதெல்லாம், இவர் அப்படியே பில்லா, ரங்கா, ஜானி காலத்து ரஜினி மாதிரியே இருக்கிறார் (அட காமாலைக் கண்ணனுங்களா...) என்று மேடைக்கு மேடை சிலர் அடிக்கிற ஜால்ராவின் காது ஜவ்வு அந்து போகிறது.

இவர்கள் தாங்களாகவே இப்படி உளறுகிறார்களா.. அல்லது இவர்தான் கூலிக்கு ஆள்வைத்து கூவ வைக்கிறாரா என்று கேட்கும் அளவுக்குப் போய்விட்டது நிலை. இப்படி இவர்கள் போட்ட ஜால்ராவில் மயங்கிப்போய், குரல், நடை, ஸ்டைல் என அனைத்திலும் ரஜினியைக் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார் பாபி.

சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதை நேரடியாகப் பார்த்து, நங்கென்று ஒரு குட்டு வைத்திருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.

சிவாவின் அந்தப் பேச்சுக்கு செம ரெஸ்பான்ஸ். பாபி சிம்ஹாவை ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசியதை எந்த அளவுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்று காட்டுவதாக இருந்தது ரசிகர்களின் அந்த கைத்தட்டல்.

சிவா பேசியது இதுதான்:

இங்கு பேசுன எல்லாரும் பாபி சிம்ஹாவை அடுத்த ரஜினியைப் பார்க்குற மாதிரியிருக்குன்னு பேசுனாங்க.

ரஜினியாவறது அவ்வளவு சுலபம் இல்லங்க. அவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் ஏராளம். அப்படியே தன் படம் நஷ்டப்பட்டாலும் அந்த நஷ்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பழக்கம் ரஜினிக்கு உண்டு.

இதையெல்லாம் பாபி சிம்ஹாவும் வளர்த்துக்கணும். அதற்குள் அவரை ரஜினி இடத்திற்கு வருவார் என்று கூறுவது பொருத்தமாகாது," என்றார்.

'பாபி சிம்ஹா ரஜினியாவாரா மாட்டாரான்னு ஜோசியம் சொல்றவங்க அப்படியே மனோபாலாவின் பாம்புச் சட்டை ஆபீஸ் பக்கம் போங்க... பாபி பத்தி அவர் புலம்பறதையும் கொஞ்சம் கேட்டுட்டு வாங்க' - டி சிவா பேசியதைக் கேட்ட பிறகு, அருகிலிருந்த இயக்குநர் ஒருவர் அடித்த கமெண்ட் இது!

English summary
Amm Creations T Siva says that Bobby Simha never becomes Superstar Rajinikanth. He adds, "Bobby is an upcoming actor, don't compare him with Great Rajinikanth'.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil