»   »  ரவுடியைத் தொடர்ந்து போலீசாக மாறும் பாபி சிம்ஹா?

ரவுடியைத் தொடர்ந்து போலீசாக மாறும் பாபி சிம்ஹா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சரத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.

சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா 'நேரம்', 'ஜிகர்தண்டா' படங்களில் வில்லனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் வென்றார்.

Bobby Simha Play a Police

எனினும் 'ஜிகர்தண்டா'வுக்குப் பின் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. இதனால் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமுடன் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டுள்ளது.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'கோ 2' ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் மீண்டும் சரத்-பாபி சிம்ஹா கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.இப்படத்தில் பாபி சிம்ஹா போலீஸ் வேடத்தில் நடிக்கப் போவதாகவும், இப்படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் என்றும் கூறுகின்றனர்.

இப்படத்தின் நடிக, நடிகையர் தேர்வு செய்யப்பட்ட பின், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Sources said Actor Bobby Simha Again Team up with Sarath for his Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil