Just In
- 39 min ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
- 1 hr ago
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
Don't Miss!
- News
"திக் திக்" அதிமுக.. ஒருவேளை சசிகலா ரிலீஸ் ஆவது டிலே ஆச்சுன்னா.. வெளியானது "புது தகவல்"!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Sports
வாழ்த்துக்கள் நட்டு.. நீங்க ஒரு லெஜண்ட்.. நடராஜனுக்காக தமிழில் பேசிய வார்னர்.. வைரல் வீடியோ!
- Education
தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா?
- Automobiles
மைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்? கசிந்த தகவல்!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோர்ட் தடை செய்தும் அக்னி தேவியை ரிலீஸ் செய்தது ஏன்... தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாபி சிம்ஹா கேள்வி!
சென்னை: நீதிமன்றம் தடைவிதித்தப் பிறகும் அக்னி தேவி படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன என்று நடிகர் பாபி சிம்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாபி சிம்ஹா, மதுபாலா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில், இரு தினங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் அக்னி தேவி. பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலை தழுவி, ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர்.
இந்த திரைப்படம் தொடர்பாக நடிகர் பாபி சிம்ஹாவுக்கும், இயக்குனர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இயக்குனர் ஜான் பால்ராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, நடிகர் பாபி சிம்ஹா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
இந்நிலையில் படம் வெளியானது குறித்து தனது கருத்தை பதிவு செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பாபி சிம்ஹா. அதில், எத்தனையோ நல்லப்படங்கள் ரிலீசாகாமல் காத்திருக்கும் சூழலில், அக்னி தேவியை மட்டும் தயாரிப்பாளர் சங்கம் ரிலீஸ் செய்ய காரணம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Uriyadi 2 Teaser: அரசியல்ல நாம தலையிடனும்.. இல்ல அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடும்.. உறியடி2 டீசர்

நான் நடிக்கவில்லை
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "அக்னி தேவி படத்தில் நான் ஐந்து நாட்கள் மட்டுமே நடித்தேன். என்னிடம் சொல்லப்பட்ட கதையை அவர்கள் எடுக்கவில்லை. எனவே அந்த படத்தில் இருந்து நான் விலகிவிட்டேன்.

கிராப்பிக்ஸ் செய்துள்ளனர்
என்னை போன்று வேறுயாரையோ வைத்து டூப்போட்டு படத்தை எடுத்துள்ளனர். சில காட்சிகளில் கிராபிக்ஸ் செய்துள்ளனர். வேறு சிலரை வைத்து டப்பிங் பேசியுள்ளனர். இதுதொடர்பாக நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். காவல் துறையில் புகாரும் அளித்துள்ளேன்.

வெளியிட தடை
எனது வழக்கின் அடிப்படையில் கோவை நீதிமன்றம், அக்னி தேவி படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. அப்படி இருக்கும் போது, படத்தை அவர்கள் எப்படி வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லை.

ஏன் இந்த மெனக்கெடல்
எத்தனையோ நல்ல படங்கள் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது. அதை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மோசடி செய்து எடுக்கப்பட்ட ஒரு படத்தை வெளியிட இவ்வளவு மெனக்கெடுகிறார்கள். யாருக்கு எதிராக இதை அவர்கள் செய்கிறார்கள் என்பது புரியவில்லை.

பின்னணியில் யார் இருக்கிறார்கள்
இந்த விவகாரத்திற்கு பிறகு யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. என்ன அரசியல் நடக்கிறது என்பதும் எனக்கு புரியவில்லை. என்னை பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறார்களா என்பதும் புரியவில்லை", என அவர் கூறியுள்ளார்.