»   »  'காதல் டூ கல்யாணம்' மண வாழ்க்கையில் நுழைந்த பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்

'காதல் டூ கல்யாணம்' மண வாழ்க்கையில் நுழைந்த பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம் இன்று திருப்பதியில் எளிமையாக நடைபெற்றது.

'உறுமீன்' படத்தில் நடித்தபோது பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு இருவரின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று இவர்களின் திருமணம் எளிய முறையில் திருப்பதியில் நடைபெற்றது. இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Bobby Simha - Reshmi Menon Marriage

திரைத்துறையில் இருந்து பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பர்களான எல்ரெட் குமார், கார்த்திக் சுப்புராஜ், கருணாகரன் மற்றும் சித்தார்த் ஆகியோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Bobby Simha - Reshmi Menon Marriage

பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வருகின்ற 24 ம் தேதி வடபழனியில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறுகிறது.

இதில் கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Bobby Simha - Reshmi Menon Marriage Today held in Tirupati.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil