»   »  பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெறுகிறது.

ஜிகர்தண்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் பாபி சிம்ஹா. தற்போது அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இனிது இனிது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மி மேனன். உறுமீன் படத்தில் நடித்த போது பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் காதல் மலர்ந்தது.

Bobby Simha-Reshmi Menon's Engagement Today

இருவரும் இந்தக் காதலை தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனால் இன்று நடைபெறும் நிச்சயதார்த்தம் இவர்களின் காதலை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.

காதலித்த ஆரம்ப காலத்தில் பாபி சிம்ஹா வீட்டினர் உடனடியாக ஒப்புக் கொண்டனர். ஆனால் ரேஷ்மி மேனன் வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை.

பின்னர் இயக்குனரும், பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பருமாகிய கார்த்திக் சுப்புராஜ் ரேஷ்மி மேனன் பெற்றோர்களிடம் பேசி இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவைத்தார்.

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நிச்சயதார்த்தம் இன்று மயிலாப்பூரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெறவிருக்கிறது. இந்த நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

பாபி சிம்ஹாவின் நெருங்கிய நண்பர்களான சித்தார்த், கருணாகரன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இருவரும் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருப்பதால் அடுத்த வருடத்தில் இருவரின் திருமணமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலித்த இருவருமே தங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணத்தை செய்து கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Bobby Simha-Reshmi Menon's engagement today. Both are Getting Engaged today in a Private Guest House in Mylapore Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil