»   »  ஏப்ரல் 22ம் தேதி பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம்

ஏப்ரல் 22ம் தேதி பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திர ஜோடிகளான பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் திருமணத் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

உறுமீன் படத்தில் இணைந்து நடித்தபோது பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் வரையிலும் கூட தங்களின் காதலை இந்த ஜோடி ஒப்புக் கொள்ளவில்லை.

கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தமும் சென்னையில் ரகசியமாக நடைபெற்றது.

Bobby Simha- Reshmi Menon Wedding Date

இந்நிலையில் ரேஷ்மி மேனன் - பாபி சிம்ஹா திருமணத் தேதி தற்போது முடிவாகியுள்ளது. அதன்படி வருகின்ற 22 ம் தேதி திருப்பதியில் இருவரின் திருமணம் நடைபெறுகிறது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து ஏப்ரல் 24ம் தேதி வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெறுகிறது.

திருமண வரவேற்பில் கலந்து கொள்ள தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் பாபி சிம்ஹா அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

திருமணத்திற்குப் பிறகு ரேஷ்மி மேனன் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாபி சிம்ஹாவின் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை கவனிக்க இருக்கிறாராம்.

பாபி சிம்ஹா 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தை தற்போது சொந்தமாக தயாரித்து வருகிறார்.

English summary
Bobby Simha- Reshmi Menon Wedding Date now Revealed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil