»   »  கோ 2 vs பென்சில்: பாபி சிம்ஹாவுடன் நேரடியாக மோதும் ஜி.வி.பிரகாஷ்

கோ 2 vs பென்சில்: பாபி சிம்ஹாவுடன் நேரடியாக மோதும் ஜி.வி.பிரகாஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபி சிம்ஹாவின் 'கோ 2', ஜி.வி.பிரகாஷின் 'பென்சில்' ஆகிய 2 படங்களும் மே 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கோ 2'. சரத் இயக்கியிருக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார்.


Bobby Simha's Ko 2 Clash with Pencil

மற்றொருபுறம் ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பென்சில்'. மணி நாகராஜ் இயக்கியிருக்கும் இப்படம் பல்வேறு சிக்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.


இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் 'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' படங்களின் வெற்றியால் தற்போது இப்படத்திற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது.


கடந்த 22ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட 'பென்சில்' தற்போது மே 13 ம் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது.


அதேநாளில் பாபி சிம்ஹாவின் 'கோ 2' வும் வெளியாவதால் தற்போது இந்த 2 படங்களும் நேரடியாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியிருக்கிறது.


வெற்றி நாயகனாக ஜி.வி.பிரகாஷ் வலம்வருவதால் 'பென்சில்' படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் 'ஜிகர்தண்டா'விற்குப் பின் பாபி சிம்ஹாவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் எதுவும் அமையவில்லை.


இதனால் பாபி சிம்ஹா-ஜி.வி.பிரகாஷ் மோதலில் வெல்லப்போவது யார்? என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

English summary
Confirmed: Bobby Simha's Ko 2 Clash with G.V.Prakash's Pencil on May 13th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil