»   »  கோ 2: 'தற்போதைய அரசியலின் பிரதிபலிப்பு'...இயக்குநரைப் பாராட்டும் ரசிகர்கள்

கோ 2: 'தற்போதைய அரசியலின் பிரதிபலிப்பு'...இயக்குநரைப் பாராட்டும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் கோ2.

அறிமுக இயக்குநர் சரத் இயக்கியிருக்கும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.


சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முழுக்கவே அரசியலை மையமாக வைத்து இப்படம் வெளியாகியிருக்கிறது.


இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான வரவேற்பு எப்படி உள்ளது? என்பதை இங்கே பார்க்கலாம்.


மது உற்பத்தி

மது உற்பத்தி-கல்வி, கோ2 படத்தின் வசனங்கள் சூப்பர் என்று பாராட்டியிருக்கிறார் செந்தில்குமார்.


முதல்படம்

இயக்குநர் சரத் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு பட்டையக் கிளப்பியிருக்கிறார் என சரவணன் பாராட்டி இருக்கிறார்.


தல

கோ 2 படத்தில் நிக்கி கல்ராணி அஜீத் பற்றி பேசுவதை சுட்டிக்காட்டியிருக்கிறார் தல அஜீத்.


விழிப்புணர்வு

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்திருக்கும் படம் என்று பாராட்டியிருக்கிறார் மணிகண்டன்.


சரத்

'கோ 2 நல்ல திரில்லர் திரைப்படம் இயக்குநருக்கு பாராட்டுகள்' என சுவாமி சிங்கம் பாராட்டியிருக்கிறார்.


மொத்தத்தில் கோ 2 நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
English summary
Bobby Simha-Nikki Galrani Starrer 'Ko 2' Movie Released Today Worldwide. Written and Directed by Sarath-Live Audience Response.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil