»   »  பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' ரீமேக்கை பெரும்தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்!

பாபி சிம்ஹாவின் 'மெட்ரோ' ரீமேக்கை பெரும்தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெட்ரோ படம் வெளியாகும் முன்பே அதன் கன்னட உரிமை பெரும்தொகைக்கு விலை போயிருக்கிறது.

சிரிஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மெட்ரோ. சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் நாளுக்குநாள் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.


Bobby Simha's Metro Kannada Remake Rights sold

இதனை மையமாக வைத்து ‘மெட்ரோ' படத்தை 'ஆள்' புகழ் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.


சமீபத்தில் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்க முடியாது என்று அடம்பிடிக்க, பதிலுக்கு படக்குழுவும் அடம்பிடித்து தணிக்கைச் சான்றிதழைக் கைப்பற்றியது.


வன்முறைக் காட்சிகள் அதிகமிருப்பதால் மறு தணிக்கையில் இப்படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தனர். வருகின்ற 24 ம் தேதி இப்படம் வெளியாகிறது.


இந்நிலையில் மெட்ரோ படத்தின் கன்னட உரிமையை முரளி குறிப்பா என்ற நிறுவனம் பெரும் தொகை கொடுத்துக் கைப்பற்றியுள்ளது.


மீரா ஜாக்கிரதை படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பாபி சிம்ஹா வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Metro remake rights for Kannada sold for a good price.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil