»   »  பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் ரகசிய நிச்சயதார்த்தம்?

பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் ரகசிய நிச்சயதார்த்தம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவரும் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் கவனிக்கத்தக்க வளர்ச்சியைக் கொண்டிருப்பவர் பாபி சிம்ஹா. சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஜிகர்தண்டா அவர் எதிர்பார்த்திராத பல பரிசுகளைக் கொடுத்தது.

இந்தப் படத்தில் நடித்ததின் மூலம் தேசிய விருதைக் கைப்பற்றிய சிம்ஹா அடுத்தடுத்த படங்களில் சோலோ ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

Bobby Simhaa - Reshmi Menon Secret Engagement

இந்நிலையில் இவருக்கும் இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரேஷ்மி மேனனுக்கும் காதல் என்று அரசல் புரசலாக செய்திகள் எழுந்தன.

இதனை இருவருமே மறுத்து வந்தனர். ஆனால் தற்போது இந்தக் காதலை உறுதி செய்யும் விதமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. வருகின்ற ஞாயிறன்று(நவம்பர் 8) இவர்கள் இருவரின் நிச்சயதார்த்தமும் நடைபெறவிருக்கிறதாம்.

இந்த விழாவானது மிகவும் ரகசியமாக நடைபெறவிருப்பதாகவும், இருவரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்றும் கூறுகின்றனர்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹெஸ்ட் கவுஸில் இந்த விழாவை நடத்தவிருக்கின்றனர். இந்த வருடம் இருவரின் கைகளிலும் நிறைய படங்கள் இருப்பதால் அநேகமாக அடுத்த வருடத்தில் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றன.

விரைவில் திரைக்கு வரவிருக்கின்ற உறுமீன் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Actor Bobby Simha to get engaged to Reshmi Menon on November 8. This Function attended by family and close friends only.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil