»   »  பாடி பில்டர்களின் 'கன்னா பின்னா' கதை இது!

பாடி பில்டர்களின் 'கன்னா பின்னா' கதை இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொதுவாக பாடிபில்டர்களை சினிமாவில் அடியாள் அல்லது வில்லன் வேடங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால் முதல் முறையாக ஏகப்பட்ட பாடி பில்டர்களை நகைச்சுவை வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள் ஒரு படத்தில்.

நகைச்சுவை

நகைச்சுவை

படத்தை இயக்கி நடிக்கும் தியா இந்தப் படம் குறித்து கூறுகையில், "பார்ப்பதற்கு பிரமாண்டமான உடலோடு காட்சியளிக்கும் இந்த உடற்கட்டு வீரர்கள் பெரும்பாலும் குழந்தை தனமாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைத்தான் படமாக்கி இருக்கிறோம்.

இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா..

இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா..

தமிழகம் முழுவதும் இருந்து நிறைய பாடி பில்டர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். தமிழகம், மற்றும் புதுவையில் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறோம். படப்பிடிப்பை வேடிக்கைப் பார்க்க வருபவர்கள் கூட முதலில் 'அடேங்கப்பா இவ்வளவு பாதுகாப்பு வீரர்களா?' என்று வியந்து விட்டு பிறகு நடிப்பதே இவர்கள்தான் என்று தெரிந்து கொண்டு, முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

நகைச்சுவை

நகைச்சுவை

யூனிட் ஆட்கள் மட்டுமல்ல நடிக்கும் நடிகர்களும் கூட பல காட்சிகளில் நடிப்பை மீறி சிரித்து கொண்டுதான் இருந்தனர். அந்த அளவுக்கு படம் முழுவதும் நகைச்சுவை இருக்கிறது .

காவல்துறை ஒத்துழைப்பு கூட தேவைப்படவில்லை

காவல்துறை ஒத்துழைப்பு கூட தேவைப்படவில்லை

சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு எங்களுக்கு காவல்துறை ஒத்துழைப்பு கூடத் தேவைப்படவில்லை. படம் யூனிட் முழுவதும் பாடி பில்டர்களை பார்த்தோ என்னவோ எந்த இடையூரும் எந்த இடத்திலிருந்தும் வரவில்லை," என்றார்.

எல்லாம் பாடி பில்டர்கள்தான்

எல்லாம் பாடி பில்டர்கள்தான்

இயக்குநர் தியாவும் ஒரு பாடி பில்டர்தான். படத்தைத் தயாரிக்கும் இருவரும் கூட பாடி பில்டர்கள்தானாம்.

நாயகியாக அஞ்சலி ராவ் நடிக்கிறார். ரோஷன் சேதுராமன் இசையமைக்க, ஜெரால்ட் ராஜமாணிக்க ஒளிப்பதிவு செய்கிறார்.

English summary
Kanna Binna is a new movie directed by debutant Thiya and the entire male characters are playing by body builders.
Please Wait while comments are loading...