For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உருவக்கேலி, பெண்களுக்கு அவமரியாதை, வன்முறை பேச்சு.. கொஞ்சம் பண்பையும் சொல்லிக் கொடுங்க பிக்பாஸ் சார்

  |

  பிக் பாஸ் போட்டியில் டிஆர்பிக்காக சுவாரசியமான பல விஷயங்கள், காதல், மோதல்கள் நடத்துவதை அனுமதிக்கிறார்கள்.

  அதே நேரம் பிக்பாஸில் எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு பெண்களை கேவலமாக சித்தரிப்பது, திட்டுவது, பெண்களிடம் அத்துமீறல் செய்வது உருவ கேலி செய்வது போன்றவை அதிகரித்துள்ளது.

  சிறிய மோதல், வாக்குவாதங்கள் டிஆர்பிக்காக, சுவாரசியத்தை கூட்டுவதற்காக இருந்தாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு. திருநங்கை சமூகமும், பெண்களும் அவமரியாதை செய்யப்படுவது தவறான முன்னுதாரணம் என சமூக ஆர்வலர்கள் கண்டிக்கின்றனர்

  பிக் பாஸ் வீட்டின் அடுத்த ரோமியோ… ரச்சிதாவுக்கு சைலண்டாக நூல் விடும் ராபர்ட் மாஸ்டர்…பிக் பாஸ் வீட்டின் அடுத்த ரோமியோ… ரச்சிதாவுக்கு சைலண்டாக நூல் விடும் ராபர்ட் மாஸ்டர்…

   தமிழ் பிக்பாஸின் கண்ணியம்

  தமிழ் பிக்பாஸின் கண்ணியம்

  பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களும் முடிந்து 6 வது சீசன் நடக்கிறது. பிக்பாஸ் உலகின் பல நாடுகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி.பின்னர் அது இந்தி தொலைக்காட்சிகளில் வர ஆரம்பித்தது. பின்னர் அது மற்ற மொழி தொலைக்காட்சிகளிலும் நடத்தப்படுகிறது. இந்தியில் பிக்பாஸ் சீசன் 15 முடிந்து 16 நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. தமிழில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மற்ற எந்த மொழி பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் தமிழ் மொழி பிக்பாஸ் சற்று கண்ணியத்துடன் நடத்தப்படுகிறது. காரணம் கமல்ஹாசன் எந்தவித கண்ணிய குறைவுக்கும் நான் இடம் கொடுக்க மாட்டேன் இது நான் நடத்தும் நிகழ்ச்சி என்று ஆரம்பத்திலேயே கண்டிப்பாக தெரிவித்து நடத்துகிறார்.

   மேல்தட்டு வர்க்கத்தினர் பங்கேற்கும் பிக்பாஸ்

  மேல்தட்டு வர்க்கத்தினர் பங்கேற்கும் பிக்பாஸ்

  பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் சிலரைத்தவிர பெரும்பாலும் கலைத்துறை, சின்னத்திரையைச் சார்ந்த மேல் தட்டு வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் வருகிறார்கள். இவர்கள் பார்ட்டி, பப், என தனிப்பட்ட வாழ்க்கையில் சுதந்திரம் என்ற பெயரில் ஒருவிதமான உலகிலிருந்து வருபவர்கள். இப்படிப்பட்டவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் எளிமை, யதார்த்தம் எப்போதும் எதிர்பார்க்க முடியாது. போலித்தனமான பழகுதல், போலித்தனமான பாராட்டுதல்கள், சின்ன விஷயங்களுக்கு உனக்கு என்று அழுவது, சண்டை போடுவது, ஹிஸ்டரியா பேஷண்ட் போல் கத்துவது போன்றவற்றை இதற்கு முந்தைய சீசனில் பார்த்திருக்கலாம்.

   பிக்பாஸில் இதுவரை வென்றவர்கள்

  பிக்பாஸில் இதுவரை வென்றவர்கள்

  இதில் பெரும்பாலும் வெல்பவர்கள், மக்கள் மனதை கவருகிறவர்கள் சாதாரண நிலையில் இருந்து வரும் கலைஞர்களோ அல்லது சாதாரண நிலையில் இருந்து வருவார்களோ தான். சிலர் அனுபவ அறிவால் பண்பட்டவர்கள், அடிப்படையில் நல்ல மனது உடையவர்கள், பண்பாளர்கள் வென்றுள்ளனர். சில சீசனில் எதிலும் தலையிடாத, எதைப்பற்றியும் கேள்வி கேட்காத சுயநலவாதிகளும் போட்டியில் வென்றுள்ளதை பார்த்துள்ளோம். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒருவித உளவியல் சார்ந்த நிகழ்ச்சி என்பதால் இதற்கு எப்போதும் வரவேற்பு உண்டு.

   போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்

  போகப்போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும்

  நாம் பார்க்கும் பிரபலங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வீட்டுக்குள் எப்படிப்பட்ட மனநிலையில் நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்க்க ஏற்படும் சுவாரசியத்தை பணம் பண்ணுவது பிக்பாஸ் நிகழ்ச்சியின் நோக்கம். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் தங்களுடைய புகழ், பொதுமக்களிடம் தங்களுக்கு இருக்கும் மரியாதை, கேமரா முன் செயல்படுகிறோம் என்கிற எண்ணம் காரண்மாக போலித்தனத்துடன் நடப்பார்கள். ஆனால் நாள் செல்லச் செல்ல கூண்டுக்குள் மாட்டிய எலியாய் தங்களுடைய சுய ரூபத்தை வெளிப்படுத்த தொடங்குவார்கள். சின்ன சின்ன விஷயங்களைக் கூட தங்களுடைய புத்தியை காண்பித்து பொதுமக்களிடம் கெட்ட பெயரை வாங்கிக் கொள்வார்கள்.

   டிஆர்பிக்காக முட்டல் மோதல் அனுமதி

  டிஆர்பிக்காக முட்டல் மோதல் அனுமதி

  புறம் பேசுவது, தேவையில்லாமல் கருத்தை உருவாக்குவது, சின்ன விஷயங்களுக்கு கூட தாங்கிக் கொள்ள முடியாமல் ஒருவருடன் எதிரியாக மோதுவது, அட்ஜஸ்ட் செய்யும் மன நிலை இல்லாதது என பல வகைகள் பல பிரபலங்கள் பொதுமக்களிடம் முகத்திரை கிழிக்கப்பட்டு நின்றதை பார்த்துள்ளோம். இதில் சிலர் வெளிப்படையாக நடந்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதையும் பார்த்துள்ளோம். பொதுமக்கள் விரும்பி நிகழ்ச்சியை பார்ப்பார்கள் விளம்பரம் கூடும் என்பதால் பல நேரங்களில் அடிதடி அளவுக்கு போகும் சம்பவங்களில் தலையிடாமல் வாரக்கடைசியில் கமல் பஞ்சாயத்து பண்ணுவார்.

   பிக்பாஸ் வில்லன் அசீம்

  பிக்பாஸ் வில்லன் அசீம்

  பிக்பாஸ் சீசன் 6-ல் வந்துள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் மிகுந்த நட்புடன் ஒருவருக்கொருவர் அனுசரணையாக உதவி செய்பவர்களாக நடந்து கொண்டார்கள். ஆனால் போக போக சாயம் வெளுக்க தொடங்கியது. அதிலும் குறிப்பாக சீரியல் நடிகர் அசீம் தான் பொதுவெளியில் இயங்குகிறோம் என்பதையும் மறந்து பெண்களிடம் கண்ணிய குறைவாக நடப்பதும், வாடி போடி என்று பேசுவதும் அடிக்கப் போவது போல் போவதும், பிக்பாஸ் வீட்டிற்குள் குழு உருவாக்கிக் கொண்டு தங்களை தாங்கள் கருத்துக்கு மாறாக இருப்பவர்களை கேலிக்கிண்டல் செய்வதும் அவர்களின் முறைப்பதும் மரியாதை குறைவாக பேசுவதையும் தொடர்ச்சியாக செய்து வருகிறார்.

   19 ரெட் கார்டுகள் வாங்கி கண்டிக்கப்பட்ட அசீம்

  19 ரெட் கார்டுகள் வாங்கி கண்டிக்கப்பட்ட அசீம்

  கடந்த வாரம் இவருடைய இந்த செயலுக்காக சக போட்டியாளர்களாலே அதிகமான ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, கமல்ஹாசன் அவரை கண்டித்ததும், நான் செய்தது தப்பு இனிமேல் நடக்காது என்று அசீம் மன்னிப்பு கேட்க கமல்ஹாசன் புத்தி கூறி அவரை அனுமதித்தார். ஓரிரு நாட்கள் மட்டுமே அமைதியாக இருந்தார் அசீம் அதன் பின்னர் பொம்மை டாஸ்க்கில் அவருடைய சுயரூபம் வெளிப்படத் தொடங்கியது. சாதாரண பிரச்சனைகளுக்கு எல்லாம் கோஷ்டி சேர்த்துக் கொண்டு கடுமையாக சண்டை போட்டுக் கொண்டு, கடுமையாக சண்டைப்போட்டு பேசியவர் ஒரு கட்டத்தில் தனலட்சுமியுடனும், ஷிவினுடனும் மோத ஆரம்பித்தார். ஷிவினுடன் வாதம் செய்ய முடியாமல் ஷிவினை உருவக்கேலி செய்ய ஆரம்பித்தார்.

   திருநங்கை சமூகத்தை அவமதித்த அசீம்

  திருநங்கை சமூகத்தை அவமதித்த அசீம்

  ஷிவின் திருநங்கை என்பதால் அவருடைய பாடி லாங்குவேஜ் அவரைப் போலவே கையை ஆட்டி உடம்பை வளைத்து கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்தார். இது மிக மோசமான ஒரு விஷயமாகும். இதை பண்பாடு உள்ள எந்த மனிதரும் அனுமதிக்க மாட்டார்கள். அடுத்து போட்டியை போட்டியாக எடுத்துக் கொள்ளாமல் கடும் கோபத்துடன் தனலட்சுமியிடம் படக்கூடாத இடத்தில் கையை வைத்து தள்ளியதுடன் போடி வாடி என்று பேசியதை பிக் பாஸ் பார்வையாளர்கள் பார்த்தனர். இதனால் அசீம் மீது கடுமையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வைக்கப்பட்டது. ஆனாலும் அசீம் செய்யும் தவறுகளை சுட்டி காட்டிய விக்ரமன் உள்ளிட்ட சக போட்டியாளர்களை சகட்டுமேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.

   அமுதவாணனும் அவமானத்திலிருந்து தப்பவில்லை

  அமுதவாணனும் அவமானத்திலிருந்து தப்பவில்லை

  பொறுமையாக குழுவில் அனைவரிடமும் அன்பாக பழகும் அமுதவாணனே இது பற்றி கேட்ட பொழுது அவரையும் உருவக்கேலி செய்து மிக தரக்குறைவாக பேசி வாடா போடா என்று திட்ட ஆரம்பித்தார். இதுபோன்ற நிகழ்வுகள் பிக் பாஸ் வீட்டில் நடப்பது சாதாரணம் தான் ஆனால் எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு ஒரு கண்ணியக்குறைவான நிகழ்வு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் திருநங்கை சமூகத்திற்கு எதிரான உருவக்கேலியும், பெண்களுக்கு எதிரான தாக்குதல், அவதூறு பேச்சுகள் எப்படி பிக் பாஸ் வீட்டில் அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வியை சமூகவலைதளங்களில் அனைவரும் எழுப்பி வருகின்றனர்.

   சமீப வார காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

  சமீப வார காட்சிகள் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

  மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடிக்கும் டாஸ்க் நடத்திய போது அது குறித்து எழுந்த விமர்சனங்களை எடுத்து பிக் பாஸ் நிர்வாகம் மன்னிப்பு கோரியது. கல்லூரி காலத்தில் பேருந்தில் பெண்ணை உரசினேன் என்று சொன்ன பிரபல நடிகர் சரவணனை போட்டியிலிருந்து வெளியேற்றியது பிக்பாஸ். மகத் யாஷிகா கண்ணியக்குறைவாக நடந்த பொழுது மிகவும் கண்டிப்புடன் இதுபோன்று நடக்க இது இந்தி பிக்பாஸ் அல்ல என்று கமல்ஹாசன் எச்சரித்தார். இப்படி மரியாதைக்குரிய தமிழக தமிழ் பிக்பாஸில் சமீப காலமாக நடக்கும் நிகழ்வுகள் சமூகத்தில் அக்கறை கொண்டவர்கள், பொதுமக்கள், பெண்களிடையே ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

   அனைத்து பஞ்சாயத்துகளையும் வார இறுதியில் பைசல் பண்ணுவதா?

  அனைத்து பஞ்சாயத்துகளையும் வார இறுதியில் பைசல் பண்ணுவதா?

  டிஆர்பிக்காக இதுபோன்ற அவமானங்களை பெண்களுக்கு எதிராகவும் திருநங்கை சமூகத்துக்கு எதிராகவும் நடத்தப்படுவதை எப்படி அனுமதிக்க முடியும். கமல் போன்ற சமூக அக்கறை உள்ள ஒரு மூத்த கலைஞர் நடத்தும் நிகழ்ச்சியில் இது போன்ற ஒரு சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதும், அது மிக எளிதாக சாதாரண ரெட் கார்ட் கொடுத்து கடந்து போவதுமாக இருந்தால் பிக்பாஸ் மீது மட்டுமல்ல அதை நடத்தும் கமல்ஹாசன் மீதும் மரியாதை குறைய தொடங்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது அல்ல.

   கொஞ்சம் மரியாதை கொடுங்க பிக்பாஸ்

  கொஞ்சம் மரியாதை கொடுங்க பிக்பாஸ்

  இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்வதால் பொதுமக்களிடையே கடுமையான கோபமும் நிகழ்ச்சி குறித்த விமர்சனமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கமலஹாசன் இதுபோன்ற கண்ணிய குறைவான செயல்களை எப்பொழுது அனுமதிக்க மாட்டார் என்கிற வகையில் இந்த வாரம் நகர் கடினமான நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கும் என்று நம்புவோமாக. திருநங்கைகள், பெண்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள் பிக்பாஸ்.

  English summary
  Bigg Boss allows many interesting things for TRB, love, conflict, Fifght etcetra. At the same time, in Bigg Boss, there has been an increase in misrepresentation of women, cursing and mocking of women like no other season. Even small skirmishes and arguments are for TRB, to add interest but there is a limit to it. Social activists condemn the disrespect of the transgender community and women as a wrong precedent.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X