»   »  காக்கிச் சட்டைக்கு கவுரவம் சேர்க்குமா போகன்?

காக்கிச் சட்டைக்கு கவுரவம் சேர்க்குமா போகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபு தேவா - ஜெயம் ரவி - அரவிந்த் சாமி... இந்த வித்தியாசமான கூட்டணியில் அடுத்து வரவிருக்கிறது போகன்.

பிரபு தேவா ஸ்டுடியோஸ் பட நிறுவனம் வித்தியாசமான கதைக்களம், திறமையான கலைஞர்கள், நட்சத்திரங்களை வைத்து பல பிரமாண்டமான படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.


Bogan... another cop story

அவற்றில் ஒன்றுதான் ரோமியோ ஜூலியட் யூனிட்டானா ஜெயம்ரவி, ஹன்சிகா, இயக்குநர் லக்ஷ்மன், இமான், வி.டி.வி.கணேஷ் கூட்டணியில் உருவாகும் போகன்.


ஜெயம் ரவி, அரவிந்த்சாமி இருவருமே இந்தப் படத்தின் ஹீரோக்கள் - வில்லன்கள்.


அதாவது ஒரே வேடம், ஆனால் இரு வேறு குணாதிசுயங்களை வெளிக் கொணரும் வேடங்கள் இருவருக்கும் என்கிறார் இயக்குநர் லக்ஷ்மன். நாயகியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்ய, டி இமான் இசையமைக்கிறார்.


இயக்குநர் லக்ஷ்மனிடம் படம் குறித்துப் பேசினோம்...


"ரோமியோ ஜூலியட் ஜாலியான காதல் கதை. போகன் அப்படி இல்லை. இது பர பரப்பான ஆக்ஷன் த்ரில்லர். வேறு மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்.


இதிலும் மெலிதான காமெடி படம் முழுவதும் இருக்கும். காக்கிச் சட்டைக்கு கௌரவம் சேர்க்கும் படமாக இது இருக்கும். படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது," என்றார்.

English summary
Jayam Ravi - Arvindsamy starring Bogan is another cop story movie produced by Prabhu Deva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil