»   »  ஜெயம் ரவி நடிக்கும் போகன் திருட்டுக் கதையா? இயக்குநர் போலீசில் புகார்!

ஜெயம் ரவி நடிக்கும் போகன் திருட்டுக் கதையா? இயக்குநர் போலீசில் புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜெயம்ரவி நடிக்கும் போகன் படத்தின் கதையை தன்னிடமிருந்து திருடிவிட்டதாக அந்தோனி தாமஸ் என்பவர் சென்னை கமிஷனரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, போகன் இயக்குநர் லஷ்மணன் (ரோமியோ ஜூலியட் இயக்கியவர்), காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:


Bogan director lodged complaint at Commissioner office

அந்தோனி தாமஸ் என்மீது பொய்யான புகாரை கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, இருவர் கதையும் அவரவர் பாணியில் எழுதப்பட்டுள்ளது என்று முடிவு செய்தார்கள். இதன்பிறகு அந்தோனி தாமஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.இதன்பிறகு கோயம்பேடு காவல் நிலையத்தில் என்மீது பொய்யான புகார் அளித்தார். நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளதால் சட்டப்படி எதிர்கொள்ளுமாறு அங்குக் கூறினார்கள். ஆனால் தொடர்ந்து பல்வேறு வழிகளில் பொய்யான புகார்கள் கூறி அந்தோனி தாமஸ் மன உளைச்சல் ஏற்படுத்துகிறார். எனவே அந்தோனி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


English summary
Bhogan movie director Lakmanan has lodged a complaint in Chennai police commissioner on Antony Thomas for claiming the story rights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil