»   »  சூர்யாவின் சி 3 இப்போதைக்கு இல்ல.... அந்த தேதியில் ரிலீசாகிறது ஜெயம் ரவியின் போகன்!

சூர்யாவின் சி 3 இப்போதைக்கு இல்ல.... அந்த தேதியில் ரிலீசாகிறது ஜெயம் ரவியின் போகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூர்யாவின் சி 3-க்கு என்ன கெட்ட காலமோ... இதுவரை நான்கைந்து முறை தள்ளிப் போடப்பட்டுவிட்டது. கடைசியாக பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்றார்கள்.

இப்போது அதுவும் இல்லை. எப்போது வரும் என்றெல்லாம் தேதி குறிக்காமல், விரைவில் வரும் என்று மட்டும் சொல்லி அமைதி காக்கிறார்கள்.

Bogan to release on Si 3 release date

'சிங்கம்' படத்தின் தொடர்ச்சியாக மூன்றாவது பாகமாக உருவாகியிருக்கும் இப்படத்தை ஹரி இயக்கியிருக்கிறார். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா ஷெட்டி, விவேக், சூரி, ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை, ஜல்லிக்கட்டு பிரச்சனை உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை வெளியிட படக்குழு தயங்கி வந்தது. மேலும் குடியரசுத் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி 3-ம் தேதிக்கு மீண்டும் தள்ளிப்போனது.

சூர்யாவின் 'சி-3' படம் தள்ளிப்போனதால், லக்ஷமன் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்சாமி நடித்துள்ள 'போகன்' படத்தை பிப்ரவரி 2-ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. முன்னதாக 'போகன்' பிப்ரவரி 9-ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more about: bogan, போகன்
English summary
Once again Surya's Si3 has been postponed from Feb 3 release, and Jayam Ravi's Bogan will be release on the same date

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil