twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திடீர் மாரடைப்பு காரணமாக.. பிரபல சண்டை இயக்குனர் மரணம்.. திரையுலகம் சோகம், பிரபலங்கள் இரங்கல்!

    By
    |

    மும்பை: பிரபல சண்டை இயக்குனர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பிரபல பாலிவுட் சண்டை இயக்குனர் பர்வேஸ் கான். இவர் இந்தியில் பல படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றி உள்ளார்.

    இவருக்கு நேற்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    கொரோனா லாக்டவுனால் வேலை இல்லை.வறுமையை விரட்ட காய்கறி வியாபாரத்தில் இறங்கிய மேலும் ஒரு நடிகர்! கொரோனா லாக்டவுனால் வேலை இல்லை.வறுமையை விரட்ட காய்கறி வியாபாரத்தில் இறங்கிய மேலும் ஒரு நடிகர்!

    மாரடைப்பால்

    மாரடைப்பால்

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இத்தகவலை பர்வேஸ்கானின் நீண்ட நாள் அசோசியேட் நிஷாந்த் கான் தெரிவித்துள்ளார். 'திடீரென ஏற்பட்ட மாரடைப்பால்தான் அவர் உயிரிழந்தார். அவருக்கு வேறு எந்த உடல் பிரச்னையும் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அந்தாதுன், பட்லாபூர்

    அந்தாதுன், பட்லாபூர்

    மறைந்த பர்வேஸ் கான், 1986 ஆம் ஆண்டில் இருந்தே பாலிவுட்டில் பணியாற்றி வருகிறார். ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியான அந்தாதுன், பட்லாபூர் ஆகிய படங்களிலும் பணியாற்றியுள்ளார். அக்‌ஷய்குமாரின் கில்லாடி, ஷாரூக்கானின் பாஸிகர், பாபி தியோலின் சோல்ஜர் உட்பட பல படங்களில் உதவி ஆக்‌ஷன் இயக்குனராக பர்வேஸ் கான் பணியாற்றியுள்ளார்.

    சண்டை இயக்குனர்

    சண்டை இயக்குனர்

    ராம் கோபால் வர்மாவின் அப் தக் சப்பான் என்ற படம் மூலம் சண்டை இயக்குனர் ஆன அவர், ஜானி கட்டார், ஏஜென்ட் வினோத் உட்பட பல படங்களுக்கு சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். மறைந்த பர்வேஸ் கானுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். பர்வேஸ் மறைவை அடுத்து இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகர் மனோஜ் பாஜ்பாய் உட்பட பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர் இர்பான் கான்

    நடிகர் இர்பான் கான்

    கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் அதிகமான மரணங்கள் நடக்கின்றன. கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் இர்பான் கான் மரணமடைந்தார். அவரை அடுத்து பிரபல நடிகர் ரிஷிகபூர் மறைந்தார். பின்னர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். மேலும் சில நடிகர்கள் உயிரிழந்தனர். இப்போது பர்வேஸ் கானும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

    English summary
    Action director Parvez Khan who worked in Sriram Raghavan's 'Andhadhun', passes away at 55
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X