விரக்தியின் உச்சத்தில் அமீர்கான்… அதிரடியாக எடுத்த முடிவு… அதிச்சியில் பாலிவுட் திரையுலகம்
மும்பை: இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமீர் கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவான லால் சிங் சத்தா படத்தை அத்வைத் சந்தன் இயக்கியிருந்தார்.
நெட்டிசன்கள் பாய்காட் செய்ததால் லால் சிங் சத்தா படம் மிகப் பெரிய தோல்வியடைந்த நிலையில், அமீர்கான் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லால் சிங் சத்தா
அமீர் கான் நடித்த 'லால் சிங் சத்தா' திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அத்வைத் சந்தன் இயக்கிய இந்தப் படம் ஹாலிவுட்டில் வெற்றிப் பெற்ற 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ரீமேக்காக உருவாகியது, அமீர்கானுடன் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்த லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தப் படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. இதனால், லால் சிங் சத்தா படத்துக்காக வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்தார் அமீர்கான்.

நெட்டிசன்கள் பாய்காட்
இந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியான 'லால் சிங் சத்தா' படத்தின் தோல்விக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தது நெட்டிசன்களின் பாய்காட் தான். 2015ம் ஆண்டு இந்தியாவில் சகிப்புத்தனமைக் குறித்து அமீர்கான் பேசியிருந்ததை குறிப்பிட்ட நெட்டிசன்கள், 'லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்க வேண்டும் ட்ரோல் செய்தனர். நெட்டிசன்கள் தொடர்ந்து பாய்காட் செய்து வந்ததே லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு காரணம் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். இதனால், வசூலில் ரொம்பவே தடுமாறிய 'லால் சிங் சத்தா' பாக்ஸ் ஆபிஸிலும் மோசம் போனது.

அதிரடி முடிவு
லால் சிங் சத்தா படத்தை தொடர்ந்து 'சாம்பியன்' என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் அமீர்கான். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், அமீர்கான் எடுத்துள்ள அதிரடி முடிவு பாலிவுட் திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அதாவது இப்போதைக்கு நடிப்பதில் இருந்து விலகுவதாகவும், படங்களை தயாரிப்பதில் மட்டும் கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். குடும்பத்தினருக்காக இதுவரை நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. அதனால், நடிப்பதை விட்டுவிட்டு எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட உள்ளதாகக் கூறியுள்ளார்.

தயாரிப்பு மட்டும் தான்
அதேநேரம் நல்ல படங்களை தொடர்ந்து தயாரித்து வருவேன் எனவும் அமீர்கான் கூறியுள்ளார். 35 ஆண்டுகளால இந்தி திரையுலகில் பயணித்து வரும் அமீர்கான், முதன்முறையாக தனது லகான் படத்தை ஆஸ்கர் போட்டியில் களமிறக்கி கெத்து காட்டினார். அதேபோல், 2016ல் அவரது நடித்த 'தங்கல்' படம் உலகம் முழுவதும் சுமார் 2000 கோடி வசூலித்து மாஸ் காட்டியது. இப்படி இன்னும் இந்தி திரையுலகில் பல சாதனைகளை படைத்த அமீர்கான் திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. பாலிவுட் திரையுலகமும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











