For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சொந்தமா 260 கோடிக்கு பிரைவேட் ஜெட்… உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா? கடுப்பான அக்‌ஷய் குமார்

  |

  மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமாரின் ராம் சேது திரைப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது.

  ராமர் பாலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை அபிஷேக் ஷர்மா இயக்கியுள்ளார்.

  இந்நிலையில், அக்‌ஷய் குமார் 260 கோடி ரூபாய்க்கு பிரைவேட் ஜெட் விமானம் வாங்கியுள்ளார் என்ற செய்தி வேகமாக பரவியது.

  அடுத்த சர்ச்சையை கிளப்புமா அக்‌ஷய் குமாரின் ’ராமர் பாலம்’ திரைப்படம்.. டிரைலரிலேயே இவ்ளோ இருக்கே? அடுத்த சர்ச்சையை கிளப்புமா அக்‌ஷய் குமாரின் ’ராமர் பாலம்’ திரைப்படம்.. டிரைலரிலேயே இவ்ளோ இருக்கே?

  பாலிவுட் டாப் ஸ்டார்

  பாலிவுட் டாப் ஸ்டார்

  குழந்தை நட்சத்திரமாக இந்தி திரையுலகில் முகம் காட்டிய அக்‌ஷய் குமார், 1991ம் ஆண்டு முதல் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். கில்லாடி, மிஸ்டர் பாண்ட், பாண்டவ், தில் தோ பாஹல் ஹை போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பாலிவுட்டின் டாப் ஹீரோவாக கலக்கி வருகிறார். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாகவே அக்‌ஷய் குமாரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கி வருகின்றன. வரிசையாக அடுத்தடுத்து அட்டர் பிளாப் படங்களால் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார் அக்‌ஷய்.

  சம்பளமே வேண்டாம்

  சம்பளமே வேண்டாம்

  ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.O' படத்தில் வில்லனாக நடித்திருந்த அக்‌ஷய் குமாருக்கு, 2020ல் இருந்தே சோதனைக் காலம் தான் போல. 2020ல் வெளியான 'லக்‌ஷ்மி' 2021ல் ரிலீஸான 'பெல்பாட்டம்', 'சூர்யவன்ஷி' ஆகிய படங்கள் ரசிகர்களால் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டன. அதேநேரம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான 'அத்ரங்கி ரே' கொஞ்சம் தப்பிப் பிழைத்தது. தனுஷும் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2022ல் ரிலீஸான பச்சன் பாண்டே, பிருத்விராஜ் படங்களும் அக்‌ஷய்க்கு பலத்த அடியை கொடுத்தது.

  260 கோடிக்கு பிரைவேட் ஜெட்

  260 கோடிக்கு பிரைவேட் ஜெட்

  முக்கியமாக 'சாம்ராட் பிருத்விராஜ்' திரைப்படம் மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது. சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரான இந்தப் படம், வசூலில் 50 கோடிகளைக் கூட தாண்டமுடியவில்லை. அக்‌ஷய் குமார் தொடர்ந்து பாலிவுட் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வந்ததோடு, படத்தின் மேக்கிங்கும் இப்படி மோசமான தோல்வியை சந்திக்க காரணமானது. அதேபோல், ரக்‌ஷா பந்தன் படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், ஒரு கட்டத்தில் 80 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அக்‌ஷய்குமார், இனி 20 கோடி ரூபாய் சம்பளம் மட்டுமே போதும் என்றளவுக்கு இறங்கி வந்தார். இந்நிலையில், அவர் 260 கோடி ரூபாய்க்கு பிரைவேட் ஜெட் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின.

  கடுப்பான அக்‌ஷய் குமார்

  கடுப்பான அக்‌ஷய் குமார்

  பிரபல ஆங்கில இதழில் அக்‌ஷய் குமார் 260 கோடி ரூபாய்க்கு பிரைவேட் ஜெட் வாங்கியுள்ளதாகக் கூறி, அதன்முன்னால் அவர் நிற்கும் போட்டோவுடன் செய்தி வெளியானது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அக்‌ஷய் குமார், "பொய் பொய் பொய்... இது கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்தி. இப்படி ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுபவர்களை திருத்த முடியாது. ஆனால், இத பார்க்கும் போது பத்திகிட்டு தான் வருது" என செம்ம கடுப்பாக விளக்கம் கொடுத்துள்ளார். அக்‌ஷய் குமாரின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

  English summary
  Bollywood actor Akshay Kumar has reportedly bought a private jet for Rs 260 crore. Akshay Kumar denied this and tweeted. He also said that I welcome such baseless lies.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X