கடவுளுக்கு நல்ல மனிதர்கள் தேவை போல.. விவேக் மரணம்.. பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்!
மும்பை: நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர். பாலிவுட் சினிமாவில் சுமார் 40 ஆண்டுகளாக கோலொச்சி வருகிறார்.
ஹீரோவாகவும், காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் இதுவரை 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அனுபம் கெர்.

அனுபம் கெர் இரங்கல்
இதுவரை இரண்டு தேசிய விருதுகள், 8 பிலிம் ஃபேர் விருதுகளை குவித்துள்ள அனுபம் கெருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் அனுபம் கெர், நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் உணரப்படும்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அன்புள்ள விவேக் !! நீங்கள் ஒரு சிறந்த நடிகர் மற்றும் பொழுதுபோக்கு கலைஞராக மட்டுமல்லாமல், திரையில் உங்கள் இருப்பு மிகவும் அமைதியானது. கடவுளுக்கு அங்கே நல்ல மனிதர்கள் தேவை என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எங்களுக்கு இன்னும் தேவை. நீங்கள் இல்லாதது பல ஆண்டுகள் உணரப்படும். ஓம் சாந்தி !! என பதிவிட்டுள்ளார்.

திடீர் மாரடைப்பு
சின்னக் கலைவாணர் என்றழைக்கப்படும் நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை காலை மரணமடைந்தார். வெள்ளிக் கிழமை திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரபலங்கள் இரங்கல்
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











