»   »  ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய பாலிவுட் நடிகர்.. தகவல் திருட்டால் அதிரடி முடிவா?

ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய பாலிவுட் நடிகர்.. தகவல் திருட்டால் அதிரடி முடிவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய ஃபர்ஹான் அக்தர்!- வீடியோ

மும்பை: தனது ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்கிவிட்டதாக பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் கணக்கை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.

கடந்த வாரம் ஃபேஸ்புக் முறைகேடு விவகாரம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது பெர்சனல் ஃபேஸ்புக் கணக்கை மூடியுள்ளார்.

Bollywood actor deletes his facebook account

பெர்சனல் ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக நீக்கிவிட்டதாகவும், தனது அதிகாரப்பூர்வ பக்கம் தொடர்ந்து ஆக்டிவ்வாக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஃபர்ஹான் அக்தர்.

50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் கணக்கு விவரங்களை அனுமதி இல்லாமல் தகவல் ஆய்வு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனெலிட்டிகா நிறுவனம் திருடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்தியதை அடுத்து ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து, டெலிட் ஃபேஸ்புக் எனும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. தகவல்களை பாதுகாப்பின்றி பகிரும் ஃபேஸ்புக்கை புறக்கணிக்க முடிவெடுத்த பலர் தங்கள் கணக்குகளை டீ-ஆக்டிவேட் செய்தனர். அப்படித்தான் ஃபர்ஹான் அக்தரும் டீ-ஆக்டிவேட் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

English summary
Bollywood actor Farkhan Akhtar permanently removed his personal Facebook account.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X