ரஜினியின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் பிரபலம்... நெல்சனின் பிளான் இதுதானா?: ஷாக்கான ரசிகர்கள்

சென்னை: ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தப் படம் நிச்சயம் வெற்றிபெறும் என ரஜினியும் அவரது ரசிகர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

நெல்சனும் அவர்களது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என இரவு, பகல் பாராமல் கடுமையாக வேலை பார்த்து வருகிறாராம்.

ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலம் பாலிவுட்டில் இருந்து இணைய உள்ளாராம்.

 வேகமெடுக்கும் ஜெயிலர்

வேகமெடுக்கும் ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகியிருந்தது. சிறுத்தை சிவா இயக்கிய இந்தப் படம் எதிர்பார்த்தளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து டாக்டர் படம் முலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சனுடன் இணைந்தார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதை படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

 நட்சத்திரக் கூட்டணி

நட்சத்திரக் கூட்டணி

ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயக், யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, புஷ்பா பட வில்லன் சுனில் ஆகியோரும் நடிப்பதாக ஜெயிலர் படக்குழு அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்டு மாஸ் காட்டி வருகிறது. மலையாளம், கன்னடம், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இணைந்துவிட்ட நிலையில், பாலிவுட் மட்டும் விதிவிலக்காக இருந்தது. ஆனால் தற்போது பாலிவுட் பிரபலம் ஒருவரும் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 அமிதாப்பச்சனுக்கு பதிலாக வில்லன் நடிகர்

அமிதாப்பச்சனுக்கு பதிலாக வில்லன் நடிகர்

மோகன்லால், சிவராஜ்குமார் இருவருமே ரஜினியின் நண்பர்களாக நடிப்பதாகவே சொல்ல்லப்படுகிறது. அதேபோல் அவர்கள் கேமியோ ரோலில் மட்டுமே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமிதாப்பச்சனும் ஜெயிலர் படத்தில் ரஜினிக்காக சில காட்சிகளில் நடிக்கலாம் என்ற செய்திகள் தீயாக பரவின. ஆனால் தற்போது அவரால் நடிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இன்னொரு பிரபலத்தை தட்டித் தூக்கியுள்ளது ஜெயிலர் டீம். அதன்படி ஜாக்கி ஷெராஃப் ரஜினியுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

 பிகில் வில்லன் ஜாக்கி

பிகில் வில்லன் ஜாக்கி

விஜய்யின் பிகில் படத்தில் ஜேகே ஷர்மா என்ற கேரக்டரில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார் ஜாக்கி ஷெராஃப். ஆரண்யா காண்டம், கோச்சடையான், பிகில் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ள ஜாக்கி ஷெராப், தற்போது ஜெயிலர் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இதுகுறித்து இன்னும் படக்குழு அறிவிப்பு வெளியிடாத நிலையில், விரைவில் அபிஸியல் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஏப்ரலில் ரிலீஸாகும் என சொல்லப்பட்ட ஜெயிலர் படம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X