»   »  காற்று வெளியிடை: கார்த்தியுடன் இணைந்த 'தாரே ஜமீன்பர்' புகழ் விபின் சர்மா!

காற்று வெளியிடை: கார்த்தியுடன் இணைந்த 'தாரே ஜமீன்பர்' புகழ் விபின் சர்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கார்த்தி நடித்து வரும் 'காற்று வெளியிடை' படத்தில் 'தாரே ஜமீன்பர்' புகழ் நடிகர் விபின் சர்மா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார்.


Bollywood Actor Vipin Sharma Team up with Karthi

ராக்கெட், சமாதான புறா, பனிமலை இவற்றுக்கு இடையில் கார்த்தி-அதிதி ராவ் நெருக்கமாக இருப்பது போன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.


ஒருபுறம் காற்று வெளியிடைக்கு அர்த்தமென்ன என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் களைகட்ட, மறுபுறம் மணிரத்னம் ஊட்டியில் சத்தமில்லாமல் படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்.


இந்நிலையில் தாரே ஜமீன்பர் புகழ்(இந்தி) நடிகர் விபின் சர்மாவை இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். விபின் சர்மா என்ன வேடத்தில் நடிக்கிறார் என்ற விவரங்களை படக்குழு வெளியிடவில்லை.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் சொந்தமாக இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

English summary
Bollywood Actor Vipin Sharma Play a Key Role in Karthi- Mani Ratnam's Kaatru Veliyidai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil