»   »  'கொழுக்கட்டை,மீன் குழம்பு'... தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடும் பாலிவுட் நட்சத்திரங்கள்

'கொழுக்கட்டை,மீன் குழம்பு'... தென்னிந்திய உணவுகளை விரும்பி சாப்பிடும் பாலிவுட் நட்சத்திரங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பொதுவாக திரை நட்சத்திரங்கள் பலரும் தீவிர உணவுக் கட்டுப்பாட்டை கடை பிடித்து வருகின்றனர்.

அதிலும் பாலிவுட் நடிக, நடிகையர் இந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். சிக்ஸ் பேக், ஜீரோ சைஸ் மோகம்தான் இதற்குக் காரணம்.

நடிக, நடிகையர் தீவிர டயட்டில் இருந்தாலும் தங்களுக்கு பிடித்த உணவு என்று வரும்போது சிலநேரம் கட்டுப்பாட்டை மீறி, ஒரு வெட்டு வெட்டி விடுகின்றனர்.

நடிக, நடிகையரின் மனக்கட்டுப்பாட்டை மீற வைக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கான்கள்

கான்கள்

பாலிவுட்டின் முப்பெரும் கான்கள் என்று அழைக்கப்படும் ஷாரூக்கான், சல்மான் கான், ஆமிர்கான் மூவருமே சிக்கன் பிரியர்கள். இதில் சல்மான், ஆமீர் இருவருக்கும் பிரியாணி வகைகள் என்றால் ரொம்பவே பிடித்தமாம். ஷாரூக்கான் கிரில்டு செய்யப்பட்ட சிக்கன் வகைகள் இல்லாமல் சாப்பிட மாட்டார் என்கிறார்கள். இது தவிர மீன் உணவுகளை ஷாரூக், சல்மான் இருவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள். சல்மான் தென்னிந்திய இனிப்பான கொழுக்கட்டைக்கு தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்ஷய்குமார்-ஹிருத்திக்ரோஷன்

அக்ஷய்குமார்-ஹிருத்திக்ரோஷன்

நடிக்க வருவதற்கு முன் அக்ஷய் தாய்லாந்து நாட்டில் சமையல் கலைஞராக இருந்தவர் என்பதால், அந்த நாட்டு ஸ்பெஷல் உணவுகளை அதிகம் விரும்புகிறார். இது தவிர இந்திய மசாலா உணவுகளும் இவருக்கு ரொம்பவே இஷ்டம் தான் என்கின்றனர். உடற்கட்டுக்காக அதிகம் மெனக்கெடும் ஹிருத்திக் தீவிரமான சாட் பிரியர். குறிப்பாக சமோசா, பானி பூரி, பேல் பூரி இவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வெட்டு வெட்டுவாராம்.

தீபிகா படுகோன்-ஐஸ்வர்யாராய்

தீபிகா படுகோன்-ஐஸ்வர்யாராய்

தீபிகா படுகோன் இட்லி-மீன் குழம்பை அடிக்கடி விரும்பி சாப்பிடுவார். இதுதவிர கடல் உணவுகளும் இவருக்கு பிடித்தமானவையே.பருப்பு சாதம், நெய், வெண்டைக்காய் பொரியல் என எளிமையாக சாப்பிடும் ஐஸ்வர்யாராய் அம்மா சமைக்கும் மீன், கோழிக்கறி என்றால் உணவுக் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறார்.

ஷில்பா ஷெட்டி - பிபாஷா பாசு

ஷில்பா ஷெட்டி - பிபாஷா பாசு

காலை உணவில் இட்லி, உப்புமா, தோசை என்று சாப்பிடும் ஷில்பாவுக்கு சிக்கன் பிரியாணி ரொம்பப் பிடிக்குமாம்.பாரம்பரிய வங்காள மற்றும் அரிசி உணவுகளை சாப்பிடும் பிபாஷாவுக்கு மீன் வறுவலும், கேரட் அல்வாவும் இரண்டு கண்கள் மாதிரியாம்.

மாதுரி தீட்சித்-கரீனா கபூர்

மாதுரி தீட்சித்-கரீனா கபூர்

ப்ரெஷ் கிரீம் உணவு வகைகள், சூப் கீரைக்கட்டு, தக்காளி, கொத்தமல்லி தழை என்று ரொம்ப சிம்பிளான உணவு வகைகளை மாதுரி விரும்பி சாப்பிடுகிறார். இதேபோல நடிகை கரீனா காய்கறி-சாலட் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார். நூடுல்ஸ், பாஸ்தா என்று சாப்பிட்டாலும் மற்றொருபுறம் கிரீன் டீ, பழச்சாறுகளையும் அதிகளவில் சேர்த்துக் கொள்கிறார்.

பிரியங்கா சோப்ரா-சோனம் கபூர்

பிரியங்கா சோப்ரா-சோனம் கபூர்

பல நாட்டு உணவுகளை விரும்பி சுவைத்தாலும், பாரம்பரிய பஞ்சாபி உணவு என்றால் பிரியங்காவிற்கு ரொம்ப இஷ்டம். சோனம் கபூரை சாக்லேட் அடிமை என்று கூட சொல்லலாம். அந்தளவு சீஸ் கேக், சாக்லேட் கேக், ஐஸ்கிரீம், புட்டிங் குக்கீஸ் என்று ஐஸ்கிரீம்களை அன்லிமிட்டெட்டாக சாப்பிடுவார்.

அனுஷ்கா சர்மா

அனுஷ்கா சர்மா

விராட் கோலியின் காதலிக்கு பட்டர் சிக்கன் மசாலா, சைனீஸ், தாய்லாந்து உணவு வகைகள் பிடித்தமானது. இதுதவிர அம்மா சமைத்துத் தரும் அசைவ உணவுகளை அனுஷ்கா வேண்டாம் என்றே சொல்வதில்லை.

English summary
Bollywood Actor-Actress Favorite Food Items Listed Here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil