சினிமாவின் கொடூர பக்கம்.. பாலிவுட் நட்சத்திரங்களின் மர்ம மரணங்கள்!
சென்னை: சினிமாவில் கொடி கட்டி பறந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களின் வாழ்க்கை சோகமானதாகவே உள்ளது. ரசிகர்கள் நடிகர்களை மனதில் வைத்து கொண்டாடினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் அவர்களின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே உள்ளது. அப்படி பாலிவுட்டில் அகால மரணம் அடைந்த நடிகர்களை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஸ்ரீதேவி : 80 கால கட்டத்தில் தமிழ்,இந்தி, தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர், 2018ம் ஆண்டு துபாயில்
எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். துபாயில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்த போது, அங்கு திடீரென மரணமடைந்தார். திருமண நிகழ்ச்சிக்கு பின் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறையில் குளியலறை பாத் டப்பில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்களில் செய்தி வெளியாகின.

அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தடயவியல் அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவித்தன. நடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் செய்யப்பட்டது.
நடிகர் குரு தத்: பியாஸா மற்றும் "காகஸ் கே பூல்" போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி நடித்த குரு தத், 1964 ஆம் ஆண்டு அகால மரணமடைந்தார். அவர் அதிகப்படியான தூக்க மருந்தை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மன அழுத்தத்தில் இருந்த இவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆன போதும், அவரின் இறப்பிற்கான காரணம் இதுவரை மர்மமாகவே உள்ளது.
திவ்யா பாரதி: சினிமாவில் பிரபலமாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே தயாரிப்பாளரின் மகன் சாஜித் அடியட்வாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 7வயதில் சினிமாவிற்கு வந்த திவ்யா பாரதி இரண்டே வருடத்தில் இரவு பகலாக 22 படங்களில் நடித்திருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்தார். சினிமாவில் பிரபலமாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே தயாரிப்பாளரின் மகன் சாஜித் அடியட்வாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். 19 வயதில் மும்பையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து விழுந்து அவர் மரணமடைந்தார். இந்த சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன; சிலர் சதி என்றும், வேறு சிலர் விபத்து என்றும் கூறினார்கள். திவ்யா பாரதியின் மரணத்தில் தற்போது வரை மர்மம் இருக்கிறது.
ஜியா கான்: நிஷாப்த் படத்தில் துணிச்சலான பாத்திரத்தில் நடித்து, பின்னர் "கஜினி" மற்றும் "ஹவுஸ்ஃபுல்" போன்ற படங்களில் நடித்த ஜியா கான், 2013 ஆம் ஆண்டு தனது 25 வயதில் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரின் தற்கொலைக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை.
பர்வீன் பாபி : 70 மற்றும் 80 கால கட்டத்தில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் பர்வீன் பாபி. "அமர் அக்பர் அந்தோணி" மற்றும் "தீவார்" போன்ற படங்களால் நடித்து சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகை என பெயர் எடுத்தார். வாழ்க்கையில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர், தனது வாழ்நாள் முழுவதும் மன அழுத்தத்தால் போராடினார். 2005 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.


Click it and Unblock the Notifications











