»   »  குடித்துவிட்டு, முத்தக்காட்சியில் நடிக்க 55 ரீடேக் வாங்கிய நடிகை!

குடித்துவிட்டு, முத்தக்காட்சியில் நடிக்க 55 ரீடேக் வாங்கிய நடிகை!

Written By:
Subscribe to Oneindia Tamil
சர்ச்சையை சர்யாக்குற ராகி சாவந்த்

மும்பை : நடிகை ராக்கி சவந்த் சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். சமீபத்தில் இவர் தொடர்பான செய்தி ஒன்று பரவி வருகிறது.

இவர் ஷாகித் காஸ்மி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் ஷூட்டிங்கின்போது முத்தக்காட்சியில் நடிப்பதற்கு 55 முறை ரீடேக் வாங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் இவர் குடிக்கு அடிமையான பெண்ணாக நடிப்பதால் ஆல்கஹால் குடித்துவிட்டு தான் ஷூட்டிங்குக்கே சென்றாராம்.

55 முறை ரீடேக்

55 முறை ரீடேக்

தமிழ் சினிமாவில் முத்தக்காட்சி ஒரு சில படங்களில் மட்டுமே அரிதாக பார்க்கமுடிந்தாலும் அது பாலிவுட் சினிமாவில் சர்வசாதாரணமான ஒன்றாகிவிட்டது. முத்தக்காட்சியில் நடித்த நடிகை ராக்கி சவந்த் 55 முறை ரீடேக் வாங்கியுள்ளார்.

குடித்துவிட்டு ஷூட்டிங்

குடித்துவிட்டு ஷூட்டிங்

அதுமட்டுமின்றி நடிப்பதற்கு முன் ஒரு பாதி பாட்டில் ஆல்கஹால் குடித்துவிட்டுத் தான் நடிக்கவே சென்றுள்ளார். "இந்தக் காட்சியில் நடிப்பது எனக்கு அசாதாரணமாக இருந்தது. அதனால் ஒரு பாதி பாட்டிலை குடித்துவிட்டு சென்றேன்" என ராக்கி ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

உண்மையாகவே நடப்பது போல

உண்மையாகவே நடப்பது போல

"முத்தக்காட்சியில் நடிக்கும்போது இது நடிப்புதான் என என்னால் உணர முடியவில்லை. உண்மையாகவே எனக்கு நடப்பது போலவே இருந்தது. நான் ரொம்ப பயந்துவிட்டேன். என்னை யாரோ கட்டாயப்படுத்தி முத்தம் தருவதைப் போல உணர்ந்தேன்" எனக் கூறியிருக்கிறார் ராக்கி சவந்த்.

குடிக்கு அடிமையான பெண்ணாக

குடிக்கு அடிமையான பெண்ணாக

இந்தப் படத்தில் ராக்கி சவந்த் குடிக்கு அடிமையான பெண்னாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி சர்ச்சைகளுக்கு உள்ளாகும் நடிகை ராக்கி சவந்துக்கு அரசியல் கட்சியினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை பிரபலம்

சர்ச்சை பிரபலம்

பரபரப்புச் செய்திகளுக்கு பஞ்சமில்லாதவர் பாலிவுட் நடிகை ராக்கி சவந்த். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரதமர் மோடி படத்துடன் கூடிய கவர்ச்சி உடையை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சுயம்வரம் நிகழ்ச்சி

சுயம்வரம் நிகழ்ச்சி

சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தி நாடு முழுவதும் பிரபலமானவர் இவர். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ராஷ்டிரிய ஆம் என்ற கட்சியை தொடங்கி, அரசியலிலும் குதித்தார். ஆனால், தேர்தலுக்குப்பின் தனது கட்சியை இந்திய குடியரசு கட்சியுடன் இணைத்து விட்டார்.

வால்மீகிக்கு எதிராக

வால்மீகிக்கு எதிராக

ராமாயணத்தை எழுதிய வால்மீகி குறித்து இந்தி நடிகை ராக்கி சவந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்தார். அக்கருத்துகள், வால்மீகி சமூகத்தினரின் உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சமூகத்தினர் போர்க்கொடி உயர்த்தினர். இதனால், ராக்கி சவந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Rakhi Sawant is known for controversies. She has takes 55 re-takes to acts in a kiss scene for the film directed by Shahid Kazmi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil