விரைவில் குட் நியூஸ்... ஆரோக்கியமான பிரசவத்திற்கு காத்திருக்கும் ஆலியா பட்!
புதுடெல்லி : பாலிவுட் நடிகை ஆலியா பட் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸுடன் அவர்களின் மகள் தான் ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய 'ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்' என்ற திரைப்படத்தில் மூலம் கதாநாயகியாக தனது அறிமுகத்தை கொடுத்தார்.
அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

காதல் திருமணம்
பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் பிரம்மாஸ்திரா படத்தில் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலராக இருந்த ரன்பீர் ஆலியா ஜோடி கடந்த ஏப்ரல் மாதல் 14ந் தேதி பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதையடுத்து, ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை சமூகவலைத்தளத்தில் அறிவித்தார்.

மருத்துவமனையில் ஆலியா
இந்நிலையில், நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இன்று காலை கிர்கானில் உள்ள எச்என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, ஆலியா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலியாவின் பிரசவ தேதி நவம்பர் 20 முதல் 30 வரை இருக்கும் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், அவர் முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.

படங்களில் பிஸி
நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருந்த போதும், ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் என்ற படத்தில் நடித்து வரும் ஆலியா பட் படப்பிடிப்பு தளத்தில் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் போட்டோஸ் வெளியானது. மேலும், பிரம்மாஸ்திரா படத்தின் ப்ரோமோஷனிலும் கணவருடன் கலந்து கொண்டார். ஆலியா கடைசி மூன்று மாதங்களில் தான் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

விரைவில் குட் நியூஸ்
இயற்கையான ஆரோக்கியமான பிரசவத்தை விரும்பும் ஆலியா பட், அதிகாலையில் யோகா சனம் செய்வது, பிரசவகால உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல ஆலியா பட்டின் மாமியார் நீது கபூர் தனது மருமகளுக்கு ஆரோக்கியமான முறையில் குழந்தை பிறக்க, அவரே தயாரித்த சில உணவுகளை அவருக்கு செய்து கொடுத்துள்ளார். தற்போது ஆலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் குட் நியூஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











