Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோனே..பதறிப்போன ரசிகர்கள் !
மும்பை : பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோ உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த செய்தி இணையத்தில் பரவியதை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் தீபிகாவிற்கு என்ன ஆச்சு என பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.
லைகாவே
ரிலீஸ்
செய்யும்
பொன்னியின்
செல்வன்..முக்கிய
நிறுவனம்
இல்லாமல்
வெளியாகும்
2
பெரிய
படங்கள்

நடிகை தீபிகா படுகோனே
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜான் ஆபிரகாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாக உள்ளது.

ஜவான்
பதான் தவிர, தீபிகா படுகோனே, ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் படத்தில் நடித்துள்ளார். பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்திலும் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், தீபிகா படுகோனேவுக்கு நேற்று இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீபிகாவுக்கு பல பரிசோதனைகளை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், அவர் அரை நாள் வரை மருத்துவமனையில் இருந்துள்ளார்.

ரசிகர்கள் நிம்மதி
தீபிகா மன அழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால் அவரது உடல்நிலை சரி இல்லாமல் போகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்கு பின் தீபிகா இப்போது நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த தகவல் வந்த பிறகே அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

இது இரண்டாவது முறை
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த 'Project K' படப்பிடிப்பின் போது தீபிகா படுகோனாவுக்கு இதய துடிப்பு அதிகரித்ததை அடுத்து, அவர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீபிகாவுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். தீபிகாவுக்கு வாயு தொடர்பான பிரச்சினை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர் மீண்டும் 'Project K' படப்பிடிப்பு தளத்திற்கு திரும்பினார்.