சமந்தா வாய்ப்பை தட்டித் தூக்கிய பாலிவுட் கவர்ச்சிப் புயல்: புஷ்பா 2வில் காத்திருக்கும் சம்பவம்
ஐதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான புஷ்பா திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
இந்தப் படத்தில் சமந்தாவின் கவர்ச்சி ஆட்டத்தில் ரசிகர்களை சூடேற்றியது 'ஊ சொல்றீயா' பாடல்.

பூஜையுடன் தொடங்கிய புஷ்பா 2
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியான 'புஷ்பா' திரைப்படம், அகில இந்திய அளவில் தரமான சம்பவம் செய்தது. சுகுமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான, புஷ்பாவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் 400 கோடிகளுக்கு மேல் வாரிக் குவித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது படக்குழு. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோருடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.

சமந்தாவின் ஊ சொல்றீயா மாமா
புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனின் ஆக்சனை விடவும், ரசிகர்களை செம்மையாக சூடேற்றியது சமந்தா தான். 'ஊ சொல்றீயா' என்ற ஒரேயொரு பாடலுக்கு சமந்தா போட்ட ஆட்டம், ரசிகர்களை தூங்கவிடாமல் பாடாய்ப்படுத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களும் சமந்தாவின் இடையழகிலும் ஆட்டத்திலும் ஆல் அவுட் ஆகிப் போனார்கள். இதேபோல் ஒரு பாடலை இரண்டாம் பாகத்திலும் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

சமந்தாவுக்கு பதில் பாலிவுட் நடிகை
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இன்னொரு 'ஊ சொல்றீயா மாமா'-வாக இந்தப் பாடல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதிலும், சமந்தாவை ஆட வைக்க புஷ்பா படக்குழு தீவிரமாக முயற்சி செய்து வந்தனர். ஆனால், இப்போது சமந்தா நடிக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து திஷா பதானி உள்ளிட்ட மேலும் சில பாலிவுட் நடிகைகளுக்கு படக்குழு வலை வீசிப் பார்த்தது. இதில், மலைகா அரோரா வந்து சிக்கியுள்ளாராம். அந்த மாதிரி ஆட்டத்துக்கு பேர் போன மலைகா அரோரா, புஷ்பா 2வில் சமந்தாவின் இடத்தை நிரப்புவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவில் சமந்தா
சமந்தா கடந்த சில தினங்களாக எதிலும் தலை காட்டாமல் இருந்து வருகிறார். மேலும் அவரது போட்டோஷுட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் சமந்தாவிற்கு அரிதான தோல்நோய் இருப்பதாகவும், அதற்காக அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், சமந்தாவின் மேலாளர் சமந்தா குறித்து வரும் அனைத்து செய்திகளும் வதந்திகள் தான். அவர் அமெரிக்கா சென்றுள்ளார் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











