Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
"மணிரத்னம் படத்தில் இதுக்காக மட்டும்தான் நடித்தேன்": பாலிவுட் நடிகை ஓப்பன் டாக்.. ரசிகர்கள் ஷாக்!
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகையான மனீஷா கொய்ராலா, தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன், உயிரே, ஆளவந்தான், பாபா உள்ளிட்ட படங்களில் மனிஷா கொய்ராலா நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் 'பம்பாய்' படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார் மனிஷா கொய்ராலா.
இந்த பயணம் கடினமானது... கேன்சர் தினத்தில் அனுபவங்களை பகிர்ந்த மனிஷா கொய்ராலா!

பாலிவுட் சூப்பர் குயின்
1991ல் வெளியான ‘செளதாகர்' என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மனிஷா கொய்ராலா, பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்தார். மனிஷாவின் கண்களில் இருந்த வசீகரமும், அவரது நடிப்பும் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்கள் இவரை பாலிவுட் சூப்பர் குயினாக கொண்டாடித் தீர்த்தனர். ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால், தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து வந்தார்.

கோலிவுட்டில் சூப்பர் அறிமுகம்
அறிமுகமானதில் இருந்தே இந்தியில் கலக்கி வந்த மனிஷா கொய்ராலா, அப்படியே கோலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார். மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்' தான் இவருக்கு முதல் படம். அரவிந்த் சுவாமிக்கு ஜோடியாக ஷாகிரா பானு என்ற கேரக்டரில் நடித்த மனிஷா, ரசிகர்களை உச்சுக் கொட்ட வைத்தார். தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி
'பம்பாய்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்த மனிஷா, அடுத்தடுத்து டாப் ஸ்டார்களின் படங்களில் கமிட் ஆனார். ஷங்கர் இயக்கத்தில் கமல் ஜோடியாக ‘இந்தியன்', அர்ஜுன் ஜோடியாக ‘முதல்வன்', சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘பாபா', மீண்டும் கமலுடன் இணைந்து ‘ஆளவந்தான்', ‘மும்பை எக்ஸ்பிரஸ்' என கோலிவுட்டையும் ஒரு கலக்கு கலக்கினார்.

திருமணமும் கேன்சர் பாதிப்பும்
தமிழில் அவ்வப்போது படங்கள் பண்ணினாலும், இந்தியில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் அசத்தி வந்தார் மனிஷா கொய்ராலா. 2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்த அவர், 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கேன்சரால் பாதிக்கப்பட்ட மனிஷா, தொடர்ந்து சிகிச்சைப் பெற்று அதில் இருந்தும் மீண்டார். தற்போது நடிப்பதை குறைத்துக்கொண்ட அவர், மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்துள்ளார்.
Recommended Video

இதற்காக பம்பாய் படத்தில் நடித்தேன்
"பம்பாய் படத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, என்னுடைய 20 வயதில் அம்மாவாக நடிக்க வேண்டாம் என பலரும் அட்வைஸ் செய்தார்கள். அதோடு அடுத்த 10 ஆண்டுகளில் எனக்கு பாட்டி வேடங்கள் தான் கிடைக்கும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். அதேநேரம், மணிரத்னம் படத்தில் நடிக்க மறுப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதையும் சொன்னார்கள். உண்மையாக பம்பாய் படம்தான் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்தது" என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.