»   »  நடிகையின் பெயரில் போலி ஆதார் கார்டு உருவாக்கி மோசடி.. பாலிவுட் நடிகை புகார்!

நடிகையின் பெயரில் போலி ஆதார் கார்டு உருவாக்கி மோசடி.. பாலிவுட் நடிகை புகார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நடிகையின் போலி ஆதார் கார்ட் மோசடி..வீடியோ

சென்னை : ஆதார் கார்டு மோசடிகள் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனது ஆதார் கார்டை தவறாக பயன்படுத்திய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகை ஊர்வசி போலீசில் புகார் செய்துள்ளார்.

'ஹேட் ஸ்டோரி 4' என்ற பாலிவுட் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஊர்வசி. இந்தப் படம் ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஊர்வசி, கரண், விவான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

Bollywood actress name used in fake aadhaar card

தற்போது இப்படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு ஆதார் அட்டையால் பிரச்னை உருவாகியுள்ளது. இவரது ஆதார் அட்டையை போல போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர் ஒருவர் ஹோட்டலில் ரூம் செய்துள்ளார்.

இந்தச் செய்தி நடிகை ஊர்வசிக்கு தெரியவர தனது உதவியாளர் எதாவது செய்திருப்பாரோ என்று விசாரித்துள்ளார். பின் தன் பக்கத்தில் இருந்து எந்த ஒரு புக்கிங்கும் நடக்கவில்லை என்று உறுதிப்படுத்திக்கொண்ட ஊர்வசி, பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது போலீசார் மீதி தகவல்களை எல்லாம் விசாரித்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர். எல்லா பணப் பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என அரசு நடைமுறைப்படுத்தி வரும் நிலையில், இம்மாதிரியான மோசடிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

English summary
Actress Urvashi is the heroine of 'Hate Story 4' Bollywood movie. A unknown person has booked a room in hotel by using fake Aadhaar card. Urvashi complained to the police against the accused who allegedly used her Aadhaar card.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X