»   »  பிரபு தேவாவைக் கொண்டாடுகிறது பாலிவுட்! - தேவி இயக்குநர் விஜய் #Devi(L) #Prabhudheva

பிரபு தேவாவைக் கொண்டாடுகிறது பாலிவுட்! - தேவி இயக்குநர் விஜய் #Devi(L) #Prabhudheva

Posted By:
Subscribe to Oneindia Tamil

"நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா மீது அன்பு வைத்திருக்கிறது. ஆனால் பாலிவுட்டோ அவரை திருவிழாவாகக் கொண்டாடுகிறது...," என்றார் 'தேவி' படத்தின் இயக்குனர் விஜய்

தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் 'தேவி'. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நேரடியாகப் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தேவி.

பிரபு தேவா

பிரபு தேவா

'பிரபு தேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபு தேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் 'தேவி' திரைப்படத்தை விஜய் இயக்க, பிரபு தேவா, தமன்னா, சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களிலும், நாசர், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

சிறந்த கலைஞர்கள்

சிறந்த கலைஞர்கள்

அதுமட்டுமின்றி, திறமையான தொழில் நுட்ப கலைஞர்களான சாஜித் - வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா (இசையமைப்பாளர்கள்), கோபிசுந்தர் (பின்னணி இசையமைப்பாளர்), மனுஷ் நந்தன் (ஒளிப்பதிவாளர்), ஆண்டனி (படத்தொகுப்பாளர்), நா முத்துக்குமார் (காலத்தால் மறக்கடிக்க முடியாத கவிஞர்), மனோஹர் வர்மா (ஸ்டண்ட் மாஸ்டர்) மற்றும் பிரபு தேவா - பரேஷ் ஷிரோத்கர் (நடன இயக்குநர்கள்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மியூசிக் வீடியோ

மியூசிக் வீடியோ

2016 ஆம் ஆண்டின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்புடன் உருவாகிவரும் தேவி படத்தின் மியூசிக் வீடியோவானது சென்னையில் உள்ள ஜி ஆர் டி ஹோட்டலில் வெளியிடப்பட்டது. விமர்சையான முறையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில் தேவி படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ், இயக்குனர் விஜய், பிரபு தேவா, தமன்னா, சோனு சூட், ஆர் ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் (பிரபு தேவா ஸ்டுடியோஸ்) ஆகியோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்ஜே பாலாஜி

"மற்ற எல்லா திகில் திரைப்படங்களிலும் இருந்தும் எங்களின் தேவி திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும்... சில வருடங்களுக்கு முன்பு வரை ரசிகர்கள் சிறந்த குடும்ப திரைப்படங்களை காண அதிக ஆர்வம் காட்டி வந்தனர், ஆனால் தற்போது பேய் படங்களை குடும்பத்தோடு சென்று காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில், இயக்குநர் விஜய் அவர்களின் அற்புதமான படைப்பில் உருவாகி இருக்கும் இந்த தேவி திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன்..." என்றார் ஆர் ஜே பாலாஜி.

சோனு சூட்

சோனு சூட்

தேவியின் வில்லன் சோனு சூட் பேசுகையில், "பள்ளிக்குச் சென்ற தங்களின் முதல் நாள் அனுபவத்தை யாராலும் என்றுமே மறக்க முடியாது.... என்னை பொறுத்த வரை, தமிழ் சினிமா தான் என்னுடைய பள்ளிக்கூடத்தின் முதல் நாள்...என்றுமே என் மனதோடு ஒட்டி இருக்கிறது...இதுவரை ரசிகர்கள் என்னை ஒரு சராசரி வில்லனாக தான் பார்த்து இருக்கிறார்கள், ஆனால் தேவி படத்தின் மூலம் என்னை ஒரு ஸ்டைலான வில்லனாக ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்...," என்றார்.

கணேஷ்

கணேஷ்

"இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக மும்மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் எங்களின் தேவி திரைப்படம் அறுபது நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது... இதற்கு முழு காரணம் இயக்குனர் விஜய் தான். ஒரே நாளில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் எங்கள் தேவி திரைப்படத்தை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது....," என்றார் டாக்டர் கே கணேஷ்.

இயக்குநர் விஜய்

இயக்குநர் விஜய்

இயக்குநர் விஜய் தன் ஏற்புரையில், "தேவி திரைப்படத்தில் எனக்கு பக்கபலமாய் இருந்த தயாரிப்பாளர் கணேஷ் அங்கிள், பிரபு தேவா சார், தமன்னா, சோனு சூட், நாசர் சார், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பிரபு தேவா சார் பற்றியும் தமன்னா பற்றியும் நான் ஒன்று சொல்லியே ஆக வேண்டும்....

நம் தமிழ் திரையுலகம் பிரபு தேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர்.

அதே போல் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து கொள்ளும் ஒரு நடிகை தமன்னா...நிச்சயமாக அவருடைய தேவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெறும் என்று முழுமையாக நம்புகிறேன்," என்றார்.

English summary
Devi movie Director Vijay says that the entire Bollywood is celebrating actor - director Prabhu Deva for his amazing talents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil