அம்பானி வீட்டு கல்யாணம் - திரைபிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பு- வீடியோ
மும்பை: தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷின் நிச்சயதார்த்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷுக்கும் அவரின் பள்ளித்தோழியான ஸ்லோகா மேத்தாவுக்கும் கோவாவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து நடந்த பார்ட்டியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆராத்யா
அம்பானி வீட்டு பார்ட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். ஸ்லோகா மேத்தா வைர வியாபாரியான ரஸல் மேத்தாவின் இளைய மகள் ஆவார்.
கரண் ஜோஹார்
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகாஷ் மற்றும் ஸ்லோகாவுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். ஸ்லோகாவை 4 வயதில் இருந்தே அம்பானி குடும்பத்தாருக்கு தெரியும்.
வாழ்த்து
ஆகாஷ் அம்பானியின் தோழியான நடிகை கத்ரீனா கைஃப் பார்ட்டிக்கு வந்திருந்தார். ஆகாஷும், ஸ்லோகாவும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.
ஆகாஷ்
ஆகாஷ் நிச்சயதார்த்த பார்ட்டியில் நடிகர் ஜான் ஆபிரகாம் கலந்து கொண்டார். ஸ்லோகா மேத்தா தனது தந்தையின் வைர வியாபார நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார்.
கிரண்
முகேஷ் அம்பானிக்கு நெருக்கமான நடிகர் ஆமீர் கான் பார்ட்டிக்கு வரவில்லை. ஆனால் அவரின் மனைவி கிரண் ராவ் வந்திருந்தார். ஸ்லோகா லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்தவர்.
சகாரிகா
புதிதாக திருமணமான கிரிக்கெட் வீரர் ஜகீர் கான் தனது மனைவியும் நடிகையுமான சகாரிகா கட்கேவுடன் வந்து ஆகாஷ், ஸ்லோகாவை வாழ்த்தினார்.
சகோதரிகள்
ஸ்லோகா மேத்தாவுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் தனது குடும்பத்தாருடன் தெற்கு மும்பையில் வசித்து வருகிறார். நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு அம்பானி குடும்பத்தார் ஸ்லோகாவை அழைத்துக் கொண்டு சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்றனர்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.