»   »  தாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பாலிவுட்!

தாதாக்கள் மிரட்டல்... மீள முடியாமல் சிக்கித் தவிக்கும் பாலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டுக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். அடிக்கடி பிரபல நடிகர், நடிகையரை தாதாக்கள் மிரட்டுவதும், பணம் பறிப்பதும் அங்கு சகஜமானது.

தாதாக்களைப் பகைத்துக் கொண்டு அங்கு யாருமே தொழில் நடத்த முடியாது. நடிகர் நடிகையர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் அங்கு தாதாக்களின் மிரட்டல்களைச் சந்தித்துள்ளனர். சில கொலைகளும் கூட இதுதொடர்பாக நடந்தும் உள்ளது.

தொழில் போட்டியில் தாதாக்களின் உதவிகளை திரையுலகினரும் கூட நாடும் சம்பவங்களும் அடிக்கடி நடப்பதுண்டு. சமீபத்தில் சில முக்கிய நடிகர்களுக்கு அடுத்தடுத்து மிரட்டல்கள் வந்துள்ளதால் மீண்டும் பாலிவுட்டில் தாதா பீதி கிளம்பியுள்ளது.

ஷாருக் - பொமன் இராணி- சோனு சூத்

ஷாருக் - பொமன் இராணி- சோனு சூத்

ரவி பூஜாரி என்ற தாதா, சமீபத்தில் ஷாருக் கான், பொமன் இராணி மற்றும் சோனு சூத் ஆகியோருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அடுத்தடுத்து இந்த மூன்று பேருக்கும் மிரட்டல் வந்துள்ளது. என்ன விசேஷம் என்றால் இந்த மூன்று பேருமே ஹேப்பி நியூஇயர் படத்தில் பங்கேற்றுள்ளவர்கள். இப்படத்தை பாரா கான் இயக்கியுள்ளார்.

முக்கியப் பாத்திரத்தில் சோனு சூத்

முக்கியப் பாத்திரத்தில் சோனு சூத்

ஹேப்பி நியூஇயர் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் சோனு சூத் நடித்துள்ளார். இவர் தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் ஆவார். சோனு சூத்துக்கு வந்த மிரட்டலைத் தொடர்ந்து தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

பல மிரட்டல்களைப் பார்த்த ஷாருக் கான்

பல மிரட்டல்களைப் பார்த்த ஷாருக் கான்

மும்பை நடிகர்களிலேயே நீண்ட காலமாகவே தாதாக்கள் மிரட்டலுக்குள்ளாகி வருபவர் ஷாருக் தான். பலமுறை அவர் மிரட்டலைச் சந்தித்துள்ளார்.

இதை மட்டும் செய்

இதை மட்டும் செய்

இந்தப் படங்களில் நடிக்கக் கூடாது, இதில்நடிக்க வேண்டும் என்றெல்லாம் மிரட்டப்பட்டவர் அவர்.

சோட்டா ஷகீலின் மிரட்டல்

சோட்டா ஷகீலின் மிரட்டல்

2002ம் ஆண்டு தயாரிப்பாளர் நஸீம் ரிஸ்வி மற்றும் பைனான்ஷியர் பரத் ஷா ஆகியோர் ஒரு படத்திற்காக அவரை அணுகினர். ஆனால் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விட்டார் ஷாருக். ஆனால் மீண்டும் வந்த அந்த இருவரும், சோட்டா ஷகீல் சொல்லித்தான் நாங்கள் வந்துள்ளோம். எனவே நடித்துத்தான் தீர வேண்டும் என்று கூறினர்.

ஷகீலே பேசி மிரட்டல்

ஷகீலே பேசி மிரட்டல்

மேலும் ஒரு போன் நம்பரைப் போட்டு ரிசீவரை ஷாருக்கிடம் கொடுத்து ,ஷகீல் பேசுகிறார் என்று கூறவே பயந்து போன ஷாருக், நான் கதையைக் கேட்கிறேன். பிறகு முடிவு செய்கிறேன் என்று கூறினாராம்.

நக்மாவுடன் நடி... அபு சலேம் மிரட்டல்

நக்மாவுடன் நடி... அபு சலேம் மிரட்டல்

அதேபோல நடிகை நக்மாவுடன் (அப்போது அவர் குட்டி நடிகை) சேர்ந்து நடிக்குமாறு கூறி தாதா அபு சலேம் பலமுறை ஷாருக்கை மிரட்டியுள்ளர்.

அலி மொரானி

அலி மொரானி

அதேபோல அலி மொரானி என்ற படத் தயாரிப்பாளருக்கும் தற்போது மிரட்டல் வந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு தாதா கும்பலைச் சேர்ந்த சிலர் இவரது வட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூட்டை நடத்தி பயமுறுத்தியுள்ளனர். ரவி பூஜாரியின் கும்பலைச் சேர்ந்தவர்களாம் இவர்கள்.

ராஜீவ் ராய்

ராஜீவ் ராய்

இதேபோல ராஜீவ் ராயும் கூட பல சிக்கல்களையும், மிரட்டல்களையும் சந்தித்தார். இவர் திரிதேவ், மொஹரா, குப்த் உள்ளிட்ட படங்களைக் கொடுத்தவர். இவரும் தாதாக்களின் மிரட்டல்களுக்குப் பயந்து 1997ல் நாட்டை விட்டே போய் விட்டார்.

ப்ரீத்தி ஜிந்தாவுக்காக மிரட்டிய டான்

ப்ரீத்தி ஜிந்தாவுக்காக மிரட்டிய டான்

அதேபோல ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா விவகாரத்தின்போது ப்ரீத்தியை தொந்தரவு செய்யக் கூடாது என்று ஒரு டான் நெஸ் வாடியாவை தொலைபேசியில் மிரட்டியதாக சர்ச்சை கிளம்பியது.

சல்மானையும் விடாத தாதாக்கள்

சல்மானையும் விடாத தாதாக்கள்

சல்மான் கானையும் கூட தாதாக்கள் விடவில்லை. 2002ம் ஆண்டு அவரை ரவி பூஜாரி மிரட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக சல்மான் கான் போலிஸிலும் புகார் கொடுத்தார். ஆனால் தன்னை மிரட்டியது யார் என்பதை அவர் சொல்லவில்லை.

அக்ஷய் குமார்

அக்ஷய் குமார்

அதேபோல அக்ஷய் குமாருக்கும் ரவி பூஜாரியிடமிருந்து மிரட்டல் வந்ததாக கூறுவார்கள். அக்ஷய் குமார் வீட்டு வேலைக்காரப் பெண் நீக்கப்பட்டதைக் கண்டித்து ரவி பூஜாரி போனில் பேசியதாக கூறப்பட்டது.

கோவிந்தா

கோவிந்தா

அதேபோல நடிகர் கோவிந்தாவுக்கு 2006ல் தாதாக்களிடமிருந்து மிரட்டல்கள் வந்தன. இதுகுறித்து அவரது சகோதரர் போலீஸிலும் புகார் கொடுத்தார். அவரை தாவூத் இப்ராகிம் கும்பல் மிரட்டியதாக அப்போது கூறப்பட்டது.

இன்று வரை தாதாக்கள் மிரட்டலும், அட்டகாசமும் மும்பையை விட்டு நீங்கவில்லை... அது தொடர்பான திரைப்படங்களும் கூட இந்த தாதாயிசத்தை கிட்டத்தட்ட ஆதரிப்பது போலவே வருவதுதான் கொடுமையானது.

English summary
Just three days after Boman Irani received a threat call from mafia man Ravi Pujari, Sonu Sood has received a similar threat from the underworld. Sonu Sood, who is playing an important part in Farah Khan's 'Happy New Year' is the fourth member of the film who has received such threats. Before him, Shah Rukh Khan and Boman Irani had also received such threat calls from underworld don Ravi Pujari. Following the calls, Sonu Sood has been given police protection.
Please Wait while comments are loading...