»   »  அய்யோ பிரபாஸா?: கடவுளே இது நடக்கவே கூடாது- பிரார்த்திக்கும் பாலிவுட்

அய்யோ பிரபாஸா?: கடவுளே இது நடக்கவே கூடாது- பிரார்த்திக்கும் பாலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கரண் ஜோஹார் பிரபாஸ், ராஜமவுலியை சேர்ந்தே பாலிவுட் அழைத்து வரக் கூடாது என்று இந்தி பிரபலங்கள் பலர் வேண்டிக் கொள்கிறார்களாம்.

பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,250 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 1000 கோடி கிளப்பை துவங்கி வைத்துள்ளார் பிரபாஸ். வழக்கமாக ரூ.100 கோடி, ரூ. 200 கோடி, ரூ.300 கோடி, ரூ. 500 கோடி கிளப்புகளை துவங்கி வைக்கும் கான்களுக்கு பிரபாஸ் சிம்ம சொப்பனமாக உள்ளார்.

அப்செட்

அப்செட்

பாகுபலி டப்பிங்கிற்கே இந்த வரவேற்பா என்று பிரபாஸை பார்த்து கான்கள் மிரண்டு போயுள்ளார்கள். பாகுபலி 2 படத்தை இந்தியில் வெளியிட்டது கான்களின் நெருங்கிய நண்பரான பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோஹார்.

கான்கள்

கான்கள்

பாகுபலி 2 வசூலை அள்ளிக் குவிப்பது பற்றி கரண் அவ்வப்போது ட்வீட்டி வருகிறார். ஒரு கான் கூட பாகுபலி 2 பற்றி கரணுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலியை அடுத்து நேரடி இந்தி படத்தை இயக்குமாறு ராஜமவுலியை ஊக்குவித்து வருகிறார் கரண் ஜோஹார். அதுவும் அந்த நேரடி இந்தி படத்தில் பிரபாஸை ஹீரோவாக்குமாறும் கரண் வலியுறுத்தியுள்ளார்.

பிரார்த்தனை

பிரார்த்தனை

பாகுபலி 2 ஹிட்டானதை பொறுக்க முடியாமல் கடுப்பில் இருக்கும் பாலிவுட்காரர்களுக்கு கரண் ராஜமவுலியிடம் கூறியதை அறிந்து ஒரே அதிர்ச்சியாம். கடவுளே இந்த காம்பினேஷன் ஒர்க்அவுட்டாகக் கூடாது என்று வேண்டுகிறார்களாம்.

English summary
As Karan Johar is insisting Rajamouli to come to Bollywood with Prabhas to direct a Hindi movie, celebs over there reportedly pray otherwise.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil