twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2013ல் பாக்ஸ் ஆபீஸில் பப்படமான பாலிவுட் படங்கள்

    By Siva
    |

    மும்பை: 2013ம் ஆண்டில் தோல்வி அடைந்த இந்தி படங்கள் பற்றி பார்ப்போம்.

    2013ம் ஆண்டுக்கு விடைகொடுக்க இன்னும் சில தினங்களே உள்ளன. இந்த ஆண்டில் பாலிவுட்டில் பல படங்கள் ரூ.100 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்துள்ளன.

    இந்நிலையில் இதே ஆண்டில் பாக்ஸ் ஆபீஸில் படுத்த படங்கள் பற்றி பார்ப்போம்.

    ஜான்ஜீர்

    ஜான்ஜீர்

    1973ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஜான்ஜீர் படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜாவை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டனர். படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். ரூ.70 கோடி செலவில் எடுக்கப்பட்ட படம் ரூ.15.19 கோடியை மட்டுமே வசூல் செய்தது.

    இஷ்க் இன் பாரீஸ்

    இஷ்க் இன் பாரீஸ்

    ப்ரீத்தி ஜிந்தா தயாரித்து நடித்த படம் இஷ்க் இன் பாரீஸ். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை சென்றதும் தெரியவில்லை.

    ஹிம்மத்வாலா

    ஹிம்மத்வாலா

    சஜித் கான் இயக்கத்தில் அஜய் தேவ்கன், தமன்னா நடித்த படம் ஹிம்மத்வாலா. 1983ல் ஜிதேந்திரா, ஸ்ரீதேவி நடிப்பில் ஹிட்டான ஹிம்மத்வாலாவின் ரீமேக் தான் அஜய் நடித்த படம். ஆனால் அஜய் தேவ்கனின் ஹிம்மத்வாலா பாக்ஸ் ஆபீஸில் ஆட்டம் கண்டுவிட்டது. ரூ.70 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரூ.47.45 கோடி தான் வசூலித்தது.

    ஐ, மீ அவர் மெய்ன்

    ஐ, மீ அவர் மெய்ன்

    ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான ஐ, மீ அவ்ர் மெய்ன் படத்தை ரொமான்டிக் காமெடியாக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுத்துவிட்டனர். படம் ரூ.7.9 கோடியே வசூல் செய்தது.

    கோரி தேரே பியார் மெய்ன்

    கோரி தேரே பியார் மெய்ன்

    இம்ரான் கான், கரீனா கபூர் முதல் முறையாக ஜோடி சேர்ந்த படம் கோரி தேரே பியார் மெய்ன். படம் ரூ.15.95 கோடி மட்டுமே வசூல் செய்தது. இம்ரான் கானின் தோல்வி படங்கள் வரிசையில் இதுவும் சேர்ந்தது.

    யம்லா பக்லா தீவானா 2

    யம்லா பக்லா தீவானா 2

    2011ல் தர்மேந்திரா அவரது மகன்கள் சன்னி மற்றும் பாபி தியோல் நடிப்பில் வெளியான ஹிட் படம் யம்லா பக்லா தீவானா. இந்த ஆண்டு ரிலீஸான யம்லா பக்லா தீவானாவின் இரண்டாம் பாகம் ஊத்திக் கொண்டது. படத்தின் வசூல் ரூ.36.7 கோடி தான்.

    பேஷரம்

    பேஷரம்

    ரன்பிர் கபூர் நடிப்பில் வெளியான கமர்ஷியல் படம் பேஷரம். சாக்லேட் பாய் ரன்பிர் சல்மான் கான், அக்ஷய் குமார் போன்று நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் ரூ.58.46 கோடி வசூல் செய்தது.

    ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை தோபாரா

    ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை தோபாரா

    ரூ.85 கோடி செலவில் அக்ஷய் குமார், இம்ரான் கான், சோனாக்ஷி சின்ஹா நடித்த படம் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை தோபாரா. ஏதோ கேங்க்ஸ்டர் படம் என்று நினைத்து சென்ற ரசிகர்கள் முக்கோண காதல் கதையை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். படத்தில் வசூல் ரூ. 61 கோடி ஆகும்.

    மாத்ரு கி பிஜ்லீ கா மண்டோலா

    மாத்ரு கி பிஜ்லீ கா மண்டோலா

    மாத்ரு கி பிஜ்லீ கா மண்டோலா

    பாஸ்

    பாஸ்

    அக்ஷய் குமார் நடித்த பாஸ் பட விளம்பரங்களை பார்த்தபோது படம் பட்டையை கிளப்பும் என்று தோன்றியது. ஆனால் படம் சத்தமில்லாமல் வந்து சென்றுவிட்டது.

    ரஜ்ஜோ

    ரஜ்ஜோ

    முஸ்லிம் பெண்ணுக்கும், பிராமண பையனுக்கும் இடையேயான காதல் கதை தான் ரஜ்ஜோ. படம் படுதோல்வி அடைந்துவிட்டது.

    English summary
    Above is the list of Bollywood movies that failed to rock at the box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X